கன்னட பெண் என்றாலும் தமிழ் என் தாய் மொழி ஆனது – ‘நந்தினி’ நித்யாராம்..!!

Read Time:2 Minute, 25 Second

201705231530106597_Am-a-Kannada-women-but-now-tamil-is-my-mother-tongue-says_SECVPFஇயக்குனர் சுந்தர் சி. தயாரிப்பில், ராஜ்கபூர் இயக்கி வரும் சின்னத்திரை தொடர் ‘நந்தினி’. தற்போது இது 100 அத்தியாயங்களை கடந்து இருக்கிறது. இந்த தொடரில் நந்தினியாக நடித்து வரும் நித்யாராம் கூறுகிறார்….

“முதலில் தமிழ் மற்றும் கன்னடத்தில் நடிக்கும் போது தயக்கமாக இருந்தது. ஷுட்டிங்கில் கூட மிகவும் பயமாக இருந்தது. ஆனால் இப்போது எந்த பயமும் இல்லாமல் சகஜ நிலைக்கு வந்து விட்டேன். நான் கன்னடத்து பெண் என்றாலும், தற்போது தமிழ் நன்கு பழகி விட்டது. தமிழ் எனக்கு தாய் மொழியாகி விட்டது. இப்போது எனக்கு கன்னடத்தை விட தமிழில் நடிப்பது எளிதாக இருக்கிறது.

சினிமாவில் நடிப்பது போன்ற உணர்வு தான் சின்னத்திரையில் இருக்கிறது. எனது உடை மற்றும் சிகை அலங்காரத்தை குஷ்பு மேடம் தான் தேர்வு செய்வார். இங்கு வந்து பல வி‌ஷயங்களை கற்றுக் கொண்டேன். பல நாடுகளில் இருந்து தொடர்பு கொண்டு ‘நந்தினி’ தொடர் பற்றி ரசிகர்கள் பேசுகிறார்கள். அது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இதில் நடிப்பதால் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இதன் இயக்குனர் ராஜ்கபூர் சாருக்கு நன்றி”.

‘நந்தினி’ தொடர் இயக்குனர் ராஜ்கபூர் கூறும் போது,“நந்தினி தொடர் பிரமாண்டமாக தயார் ஆகிறது. சினிமா போலவே 100-க்கும் அதிகமானவர்கள் வேலை செய்கிறார்கள். சுந்தர்.சி இந்த தொடரை பார்த்து திருத்தங்கள் செய்வார். இந்த தொடர் தமிழ், கன்னடம், தெலுங்கு,மலையாளம் ஆகிய மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது. குஷ்பு இதில் ஒரு முக்கிய பாத்திரத்தில் வருகிறார். மற்றொரு பிரபலமும் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருக்கிறார்” என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நிமிடங்களில் 2.5 லட்சம் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்த சியோமி..!!
Next post வெறுப்புச் செயற்பாடுகளின் அபாயமணிச் சத்தம்..!! (கட்டுரை)