தாய்மார்கள் செய்யும் தவறுகள்: ஆபத்தில் சிக்கும் குழந்தைகள்..!!
புதிய தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு கவனக் குறைவினால் செய்யும் ஒருசில விஷயங்கள், குழந்தையை அபாய நிலைக்கு கொண்டு செல்கிறது.
உணவினால் ஏற்படும் அலர்ஜி
குழந்தைகளுக்கு சில உணவுகளை கொடுக்கும் போது , ஏற்படும் மிகச் சிறிய அலர்ஜி கூட குழந்தையை அபாய நிலைக்கு எடுத்து சென்றுவிடும்.
சில வகை உணவுகளை சாப்பிடும் குழந்தைகளுக்கு அலர்ஜி ஏற்பட்டால் வாந்தி, மூச்சு விடுவதில் சிரமம், வயிற்றுக் கோளாறுகள் போன்ற அறிகுறிகள் தென்படும்.
அப்போது தாமதிக்காமல் உடனடியாக மருத்துவரை அணுகி, அதற்கான காரணத்தை அறிந்து கொள்வது மிகவும் அவசியம்.
குழந்தைக்கு விரைவாக உணவு கொடுத்தல்
சில தாய்மார்கள் தங்களது குழந்தைகளுக்கு விரைவாக சாதம் போன்ற கெட்டியான உணவுகளை கொடுக்க தொடங்கி விடுகின்றனர்.
ஆனால் குழந்தைக்கு திடமான உணவுகள் செரிமானம் அடையும் அளவிற்கு சக்தி இல்லை என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
மேலும் குழந்தைகளின் 4 முதல் 6 மாதத்திற்கு குறைவாக எந்த ஒரு திட உணவுகளையும் கொடுக்கக் கூடாது. ஏனெனில் அது குழந்தைக்கு செரிமான பிரச்சனையை ஏற்படுத்தி, உடல் பருமனை அதிகரிக்க செய்துவிடும்.
வேர்கடலை கலந்த உணவுகளை கொடுத்தல்
ஆய்வுகளின் படி, வேர்கடலை கலந்த உணவுகளை 4 மாதம் முதல் 6 வரை உள்ள மாதத்தில் கொடுக்கலாம்.
மேலும் வேர்கடலை கலந்த உணவுகளான பீனட் பட்டர் ஆகியவற்றை ஒரு வயதிற்குள் குழந்தைக்கு கொடுப்பதன் மூலம் முட்டை போன்ற பொருட்களால் உண்டாகும் அலர்ஜியை 80% வரை குறைக்க முடியும்.
குழந்தையின் படுக்கை விரிப்புகள்
குழந்தைகள் உபயோகிக்கும் தலையணை மற்றும் படுக்கை விரிப்புகள் சுத்தமாக இருக்க வேண்டியது அவசியம்.
இவற்றில் ஏதேனும் தூசுக்கள் இருந்தால், அது குழந்தையின் தூக்கம் மற்றும் மூச்சுவிடுதை பாதிக்கும். எனவே அடிக்கடி சுத்தம் செய்வது அவசியமாகும்.
கைப்பைகள் வைப்பதில் கவனம்
குழந்தைகள் கைப்பையின் மீது அதிக ஆர்வம் வைத்து இருப்பார்கள். அதை திறந்து பார்க்க விரும்புவார்கள்.
அந்த கைப்பையில் ஏதேனும் கூர்மையான பொருள், அல்லது அழகு சாதன பொருட்கள் இருந்தால், அது குழந்தைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடும். எனவே குழந்தைகளுக்கு எட்டாத இடத்தில் கைப்பைகளை கவனமாக வைக்க வேண்டும்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating