வேடிக்கை பார்த்த சிறுமி! நீருக்குள் இழுத்த கடல் சிங்கம்: திக் திக் வீடியோ..!!

Read Time:2 Minute, 19 Second

625.500.560.350.160.300.053.800.748.160.70கனடாவில் உள்ள மீன்பிடி துறைமுகத்தில் வேடிக்கை பார்த்து கொண்டிருந்த சிறுமியை, நீருக்குள் இருந்த கடல் சிங்கம் உள்ளே இழுக்கும் அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது.

கனடாவின் வான்கூவர் நகரில் மீன்பிடி துறைமுகம் ஒன்று உள்ளது. அங்கிருந்த நீரில் கடல் சிங்கம் ஒன்று நீந்தி கொண்டிருந்தது.

இதை அருகிலிருந்து பார்வையாளர்கள் ரசித்து கொண்டிருந்தனர். சிலர் கடல் சிங்கத்துக்கு உணவுகளை தூக்கி போட்டபடி இருந்தனர்.

அப்போது, திடீரன துறைமுக விளிம்பில் அமர்ந்திருந்த ஒரு சிறுமியின் பின்புற ஆடையை பிடித்து கடல் சிங்கம் நீருக்குள் இழுத்தது.

இதையடுத்து அருகிலிருந்த ஒரு நபர் உடனடியாக நீருக்குள் குதித்து சிறுமியை காப்பாற்றினார்.

இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.இதை அங்கிருந்த ஒருவர் வீடியோவாக எடுத்து இணையத்தில் பதிவேற்றியுள்ளார்.

இது குறித்து கடல் பாலூட்டி ஆராய்ச்சி பிரிவின் தலைவர் Andrew Trites கூறுகையில், அந்த வீடியோவை நான் பார்த்தேன். அதில், கடல் சிங்கம் மேல் எந்த தவறுமில்லை.

அதை சுற்றி நின்றிருந்தவர்கள் செய்த தவறால் தான் இது நடந்துள்ளது. அந்த கடல் சிங்கத்துக்கு அங்கிருந்தவர்கள் உணவு அளித்துள்ளார்கள்.

இதையடுத்து அந்த சிறுமியின் உடையை கண்ட அந்த கடல் சிங்கம் அதை உணவு என நினைத்து உள்ளே இழுத்துள்ளது என அவர் கூறியுள்ளார்.

இது போன்ற விலங்குகளை தொந்தரவு செய்யாமல், தூரத்திலிருந்து தான் பார்க்க வேண்டும் எனவும் Andrew கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 72 வயது ரிஷிகபூருக்கு, 102 வயது அப்பாவாக நடிக்கும் அமிதாப் பச்சன்..!!
Next post எனது திறமைக்கு தீனி போடுங்கள்: நடிகை ரெஜினா..!!