பளிச்சென்று முகம் பிரகாசிக்க அருமையான க்ரீம் இதோ..!!

Read Time:2 Minute, 4 Second

625.0.560.350.160.300.053.800.668.160.90 (1)இரசாயனம் கலந்த கண்ட அழகு சாதனப் பொருட்களைக் கொண்டு சருமத்தைப் பராமரிப்பதால், நமது சரும ஆரோக்கியம் பாதிப்படைந்து, முதுமைத் தோற்றம் தான் கிடைக்கிறது.

எனவே இயற்கையான முறையில், நமது சருமத்தை ஆரோக்கியமாக வைப்பதற்கு, அருமையான வழி இதோ!

தேவையான பொருட்கள்

ரோஸ் வாட்டர் – 3 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்
சந்தனப் பவுடர் – 1 டேபிள் ஸ்பூன்
ஆலிவ் ஆயில் – 2 டீஸ்பூன்
கற்றாழை ஜெல் – 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை

முதலில் ஒரு கிண்ணத்தில் எலுமிச்சை சாறு, ரோஸ் வாட்டர் மற்றும் சந்தனப் பவுடர் ஆகிய அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்கு கலந்து, மஸ்லின் துணியைப் பயன்படுத்தி, அதில் உள்ள அதிகப்படியான நீரை மட்டும் வெளியேற்றி விட வேண்டும்.

பின் அதில் இருந்து கிடைத்த கெட்டியான பேஸ்டுடன், கற்றாழை ஜெல், ஆலிவ் ஆயில் சேர்த்து நன்கு கலந்து, காற்றுப் புகாதவாறு வைக்க வேண்டும்.

பயன்படுத்தும் முறை

நாம் இரவில் உறங்குவதற்கு முன், வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவி, நன்றாக துடைத்து விட்டு, இந்த க்ரீம்மை முகத்தில் தடவி, இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்.

பின் மறுநாள் காலையில் மீண்டும் வெதுவெதுப்பான நீரில் முகத்தை நன்றாக கழுவ வேண்டும்.

இதேபோல ஒரு வாரம் தொடர்ந்து செய்து வந்தால், நமது சருமத்தில் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆண்களின் பாலியல் ஆசை குறைவதற்கான 5 காரணங்கள்..!!
Next post யாருடா மச்சா இவங்க எல்லாம்..? இந்த குத்து குத்துராங்க..!! (வீடியோ)