பெண்களை காதலில் விழ வைப்பது எப்படி என தெரியுமா?..!!

Read Time:3 Minute, 41 Second

625.500.560.350.160.300.053.800.748.160.70பெண்களை இப்படிதான் காதலில் விழ வைக்க முடியும்..?

உண்மையான இரக்கம்

இந்த விஷயத்தில் நீங்கள் நடிக்க முடியாது. நடித்தாலும் மாட்டிக்கொள்வீர்கள். உதாரணமாக, உங்களை ஒருவர் எப்படி நடத்தினாலும் அவர் மேல் அன்புடன் இருப்பது, பெண்களை சட்டென்று உங்களிடம் விழ வைத்துவிடும்.

பெருந்தன்மை

பெருந்தன்மை என்பது பணம் மற்றும் பரிசுகள் விஷயத்தில் தாராளமாக இருப்பது இல்லை. ஒட்டுமொத்தமாக அனைத்து விஷயத்திலும் பெருந்தன்மையுடன் நடந்துகொள்ள வேண்டும். உங்களிடம் நெருக்கமானவர்களிடம் அன்பாக நடந்து கொள்ளுதல், உங்கள் நேரத்தை செலவிடுதல் போன்றவை இதில் அடங்கும்.

ஆதரவு

அனைத்து பெண்களுக்கும் தங்களுக்கு ஆதரவு தரும் துணையை மிகவும் பிடிக்கும். அவர்களை யாராவது ஊக்குவித்து கொண்டே இருக்க வேண்டும் என நினைப்பார்கள்.

அவருடைய சாதனைகளை நினைத்து மகிழ்தல்

தங்களுக்கு ஆதரவாக இருக்கும் ஆண்களை பிடிப்பது போல, தங்களது சாதனைகளை நினைத்து உற்சாகம் அடையும் ஆண்களை பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். உதாரணமாக அவருக்கு பணி உயர்வு அல்லது பெரிய காரியங்களில் வெற்றியடையும் போது, அதை நீங்களே சாதித்தது போல எண்ணி பெருமை அடைய வேண்டும்.

அவருடைய ஆர்வங்களில் உங்களுக்கும் ஆர்வம்

அந்த பெண்ணுக்கு பிடித்த விளையாட்டு, உணவுகளில் உங்களுக்கு ஆர்வம் இருக்க வேண்டும் என்று அர்த்தம் அல்ல. அந்த பெண் மிகவும் காதலிக்கும், செய்ய துடிக்கும் ஒரு விஷயத்தில் உங்களுக்கு ஆர்வம் இருந்தால், எளிதில் உங்களிடம் விழுந்துவிடுவார்கள்.

அவளுடைய பிரச்சனைகளுக்கு செவி சாய்த்தல்

ஒரு பெண் உங்களிடன் தனது பிரச்சனைகளை சொல்லும் போது, தனக்கு நேர்ந்த கொடுமைகளை சொல்லும் போது, கவனிக்காமல் இருப்பது மிகவும் தவறு. அவளது பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்லுங்கள்.

ஆறுதல் சொல்லுங்கள்

அந்த பெண்ணுக்கு உங்களை ரொம்ப பிடிக்கும். அன்பாக நடந்து கொள்ளுங்கள் அந்த பெண்ணிடம் மட்டுமல்லாமல், அனைவருடனும் அன்பாக நடந்து கொள்ளுங்கள். அது அந்த பெண்ணுக்கு நீங்கள் எப்போதும் அவரை அன்பாக பார்த்துக்கொள்வீர்கள் என்ற நம்பிக்கையை தரும்.

வெற்றிகளை பாராட்டுங்கள்

அவரது சாதனைகள் மற்றும் வெற்றிகளை கொண்டாடுங்கள். மேலும் வெற்றியடைய வாழ்த்துங்கள். அர்ப்ப விஷயமாக நினைத்துவிடாதீர்கள். உங்களது மென்மையான பக்கத்தை காட்டுங்கள் அனைவருக்கும் ஒரு மென்மையாக பக்கம் இருக்கும். அந்த பெண்ணிடம் உங்களது அக்கறையை காட்டுங்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யாருடா மச்சா இவங்க எல்லாம்..? இந்த குத்து குத்துராங்க..!! (வீடியோ)
Next post சங்கு சக்கரத்திற்கு கிடைத்த ‘யு’ சான்றிதழ்..!!