எந்த நேரத்தில் பால் குடிக்கலாம்: காலையா அல்லது இரவு நேரமா?..!!

Read Time:3 Minute, 20 Second

625.0.560.350.160.300.053.800.668.160.90பால் மிகவும் ஆரோக்கியமான உணவுப் பொருட்களுள் ஒன்று. ஆனால் இந்த பாலை எப்போது குடிப்பது நல்லது? பகல் வேளையில் குடித்தால் நல்லதா அல்லது இரவில் குடிப்பது நல்லதா? பொதுவாக உடலுக்கு வேண்டிய கால்சியம் மற்றும் புரோட்டீனைப் பெற சிறந்த வழி தவறாமல் பால் அருந்துவதுதான்.

ஆனால் இந்த பாலை குறிப்பிட்ட நேரங்களில குடிப்பதால், குறிப்பிட்ட ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். இப்போது பாலை எந்த நேரத்தில் குடித்தால் என்ன நன்மை கிடைக்கும் என பார்க்கலாம்.

காலை உணவின் போது அதிகளவு புரோட்டீன் வேண்டுமானால், பாலை காலையில் குடிப்பது நல்லது. மேலும் பாலில் கால்சியம் மற்றும் புரோட்டீனைத் தவிர, பொட்டாசியம், மக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின்கள் போன்றவையும் உள்ளது.

காலை வேளையில் உடற்பயிற்சியில் ஈடுபடுபவராயின் காலையில் பால் குடிப்பதன் மூலம், புரோட்டீன் மற்றும் கால்சியம் கிடைத்து, எலும்புகளும், தசைகளும் வளர்ச்சி பெறுவதோடு, புதுப்பிக்கவும் ஆரம்பிக்கும்.

நாள் முழுவதும் அடிக்கடி பசி எடுக்கக்கூடாது என்று நினைப்பவர்கள், காலையில் பால் குடிப்பது நல்லது. ஆனால் பாலைக் குடித்த பின் வயிறு உப்புசத்துடன் இருப்பதை உணர்ந்தால், காலையில் குடிப்பதை தவிர்த்திடுங்கள்.

இரவில் தூங்க முடியாமல் அவஸ்தைப்படுபவர்கள், ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பாலைக் குடிப்பது நல்லது. இதனால் மனம் அமைதியடைந்து, விரைவில் ஆழ்ந்த தூக்கத்தைப் பெறலாம்.

நாள் முழுவதும் உழைத்து களைத்து மனம் சோர்ந்திருக்கும் போது, அந்த மனச் சோர்வில் இருந்து வெளிவர இரவில் ஒரு டம்ளர் பாலைக் குடியுங்கள். இதனால் அதில் உள்ள அமினோ அமிலமான ட்ரிப்டோஃபேன், மூளையில் செரடோனினை வெளியிடச் செய்து, ரிலாக்ஸாக உணர வைக்கும்.

உடல் எடையைக் குறைக்க நினைத்தால், இரவில் பால் குடிக்காதீர்கள். மேலும் இரவில் பால் குடித்தால், அது சிலருக்கு செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

எப்போது பால் குடிப்பதாக இருந்தாலும், வெதுவெதுப்பான பாலைக் குடியுங்கள். இதனால் செரிமானம் சிறக்கும். மேலும் அளவுக்கு அதிகமாக பால் குடிப்பது நல்லதல்ல. ஒரு நாளைக்கு 150-200 மிலி பால் போதுமானது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post செம்ம கொமடி..!! முழுசா பாருங்க அசந்திடுவீங்க….!! (வீடியோ)
Next post வாவ் என்ன ஒரு காந்தக்குரல்..? இந்த அழக பாருங்களேன்..!! (வீடியோ)