ஒட்டுமொத்த கிராம மக்களின் பிறந்த திகதியும் ஜனவரி 1..!!

Read Time:1 Minute, 34 Second

article_1495269110-1வருடத்தின் முதல் நாளான ஜனவரி 1ஆம் திகதி பிறந்த நாள் கொண்டாடுவது என்பதே ஒரு தனி மகிழ்ச்சிதான்.

ஆனால், ஒரு கிராமத்தில் ஒட்டுமொத்த மக்களின் பிறந்த நாள் ஜனவரி 1 என்ற தகவல் உங்களுக்கு தெரியுமா?
இந்திய குடிமகனின் ஆதாரம் என்று அழைக்கப்படும் ஆதார் அட்டை அப்படித்தான் கூறுகின்றது.

அலகாபாத் அருகில் உள்ள கான்ஜாசா என்ற கிராமத்தில் உள்ள பாடசாலை மாணவர்களின் ஆதார் அட்டை அண்மையில் சரிபார்க்கப்பட்டது.

அப்போதுதான் அனைத்து பாடசாலை மாணவர்களின் பிறந்த திகதியும் ஜனவரி 1 என்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அதன்பின்னர் அந்த கிராமத்தில் உள்ள மற்ற நபர்களது ஆதார் அட்டையை சரிபார்த்தபோது, அந்த கிராமத்தில் உள்ள அனைவரின் பிறந்த திகதியும் ஜனவரி 1 என்றே இருந்துள்ளது.

கணினி குளறுபடி காரணமாக இந்த தவறு நடந்துள்ளதாகவும், உடனடியாக இந்த தவறு, சரிசெய்யப்பட்டு அனைத்து மக்களின் உண்மையான பிறந்த திகதியுடன் கூடிய புதிய ஆதார் அட்டை விரைவில் வழங்கப்படும் என்றும் ஆதார் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சங்கிலி புங்கிலி கதவ தொற முதல் நாள் வசூல் இதோ..!!
Next post வலி நிவாரணி மாத்திரைகளுக்கும் மாரடைப்புக்கும் தொடர்பு?..!!