சிம்புவுக்காக `ரத்தம் என் ரத்தம்’ வரிகளுடன் வைரமுத்து..!!

Read Time:2 Minute, 19 Second

201705201636571330_Vairamuthu-writes-ratham-en-ratham-for-STR_SECVPFஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஸ்வின் தாத்தா, மதுர மைக்கேல் உள்ளிட்ட 4 கெட்டப்புகளில் சிம்பு நடித்து வரும் படம் `அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’. இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக ஸ்ரேயா சரண், தமன்னா பாட்டியா, சானா கான் உள்ளிட்ட 3 பேர் கதாநாயகிகளாக நடித்து வருகின்றனர்.

இரண்டு பாகங்களாக வெளிவர இருக்கும் இப்படத்தின் முதல் பாகம் ரம்ஜானை முன்னிட்டு வருகிற ஜுன் 23-ல் வெளியாக இருக்கிறது.
இரண்டாவது பாகம் கிறிஸ்துமஸ் விடுமுறையில் ரிலீசாக இருக்கிறது.

இப்படத்தின் இரு டீசர்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இப்படத்தின் டிரெய்லரை அடுத்த மாதம் ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது. ஒரு பாடல் மட்டும் படமாக்கப்பட உள்ள நிலையில், இப்படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. டப்பிங் பணிகளில் சிம்பு தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

யுவன் ஷங்கர் ராஜா இசையில் பாடல்கள் விரைவில் வெளியாக இருக்கிறது. இதில் சிம்புவின் அறிமுக பாடலை 7 முறை தேசிய விருதுகளை வென்றுள்ள கவிஞர் வைரமுத்து எழுதியிருக்கிறார்.

“ரத்தம் என் ரத்தம்” என்ற வரிகளுடன் தொடங்கும் அப்பாடல் `படையப்பா’ படத்தில் இடம்பெறும் “சிங்கநடை போட்டு சிகரத்தில் ஏறு” என்ற பாடல் போன்று ரசிகர்களால் விரும்பி பார்க்கப்படும் என்று படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தெரிவித்திருக்கிறார். இப்பாடலுக்கான படிப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இந்தக் கிராமத்து இளைஞர்களைப் பெண்கள் திருமணம் செய்வதில்லை..!!
Next post ட்ரம்ப்பை வாட்டிவதைக்கும் ரஷ்ய விசாரணை..!! (கட்டுரை)