தயாரிப்பாளர்களால் அனுஷ்காவிற்கு நேர்ந்த அவமானம்..!!

Read Time:2 Minute, 18 Second

anuska_shooting_001.w245முதல்முறையாக ஆடிஷனில் கலந்து கொண்ட அனுஷ்காவின் புகைப்படங்களை பார்த்த தயாரிப்பாளர்கள் நீங்க ஹீரோயினுக்கு பொருத்தமானவர் இல்லை என்று கூறி அவரை நிராகரித்துள்ளனர். ஆனால் தற்போது அனுஷ்கா கோலிவுட் மற்றும் டோலிவுட்டின் முன்னணி நடிகையாக உள்ளார்.

ராஜமவுலி இயக்கத்தில் அவர் தேவசேனாவாக நடித்த பாகுபலி 2 படம் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் அனுஷ்கா பற்றி முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. அனுஷ்கா படங்களில் நடிக்க ஆசைப்பட்டு ஆடிஷனில் கலந்து கொண்டுள்ளார். அவரின் முதல் போட்டோஷூட்டின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பார்த்த தயாரிப்பாளர்கள் நீங்கள் ஹீரோயினுக்கு பொருத்தமானவர் இல்லை என்று கூறி அவரை நிராகரித்துள்ளனர்.

முதன்முதலாக அனுஷ்கா கலந்து கொண்ட போட்டோஷூட்டின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

அனுஷ்கா தெலுங்குபடம் மூலம் சூப்பர் நடிகையானார். அதன் பிறகு 2006ம் ஆண்டு எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில் வெளியான விக்ரமார்குடு படம் மூலம் பிரபலமானார்.

ராஜமவுலியின் இயக்கத்தில் மூன்று படங்களில் நடித்த ஒரே நடிகை அனுஷ்கா தான் என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் குறிப்பாக தேவசேனா கதாபாத்திரம் காலத்தால் அழியாத கதாபாத்திரமாகிவிட்டது.

அனுஷ்கா நடிக்க வரும் முன்பு யோகா டீச்சராக இருந்துள்ளார். அவர் நடிகை பூமிகாவின் கணவர் பரத் தாகூரிடம் இருந்து யோகா கற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மணமகனின் தலையில் துப்பாக்கியை வைத்து கடத்திய காதலி: சுவாரசிய சம்பவம்..!!
Next post வேலைத்தளத்தில் படுக்கைக்கு அழைத்த மேனேஜர்… வீரத்தமிழச்சியின் அனல்பறக்கும் ஆவேசம்..!! (வீடியோ)