மலையாள படத்தில் பார்வையற்ற நடன மங்கையாக தன்ஷிகா..!!

Read Time:1 Minute, 19 Second

201705171528530610_actress-dhansika-is-a-blind-dancer-in-the-Malayalam-film_SECVPFகபாலி’ படத்தில் ரஜினி மகளாக தன்ஷிகா நடித்த பிறகு, அவருக்கு, பல்வேறு படங்களில் விதம் விதமான வேடங்களில் நடிக்கும் வாய்ப்புகள் தேடி வருகின்றன. சமீபத்தில் திரைக்கு வந்த `எங்க அம்மா ராணி’ படத்தில் 2 குழந்தைகளின் தாயாக நடித்தார். தற்போது மலையாள, கன்னட படங்களிலும் நடித்து வருகிறார்.

தற்போது, விக்ரம் நடிப்பில் தமிழ், இந்தியில் வெளியான `டேவிட்’ படத்தை இயக்கிய பிஜாபல் நம்பியார் இயக்கும் மலையாள படம் `சோலோ’. இதில் துல்கர் சல்மான் நாயகனாக நடிக்கிறார். அவருடைய ஜோடியாக தன்ஷிகா நடிக்கிறார்.

தன்ஷிகா நடிக்கும் முதல் மலையாள படம் இது. இதில் பார்வையற்ற நடன மங்கையாக தன்ஷிகா நடிக்க இருக்கிறார். இது தவிர தன்ஷிகா நடிக்க சமுத்திரகனி இயக்கும் `கிட்ணா’ படம் மலையாளத்திலும் வர இருக்கிறது. கன்னடத்தில் `உத்கர்ஷா’ படத்தில் நடிக்கிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தனது ஆணுறுப்பால் பஸ்ஸை கட்டி இழுத்த சீன இளைஞர்… அதிர்ச்சி வீடியோ..!!
Next post பெண் கொலை: கள்ளத்தொடர்பை கைவிடாததால் வெட்டிக் கொன்றேன்- கணவர் வாக்குமூலம்..!!