கைவிரல் நகங்களைத் தேய்க்கும் போது தலைமுடி வளருமாம்..?..!!

Read Time:3 Minute, 50 Second

hair_cat001.w245தலைமுடி உதிர்வதை தடுக்க ஏராளமான இயற்கை வழிகள் உள்ளது. அதில் ஒன்று தான் கைவிரல் நகங்களைத் தேய்க்கும் முறையாகும்.

உண்மையில் இந்த முறையின் மூலம் தலைமுடி உதிர்வதைத் தடுப்பதோடு, முடியின் வளர்ச்சியையும் தூண்டலாம்.

செய்யும் முறை

படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு கை விரல்களை மடித்து, விரல்நகங்கள் ஒன்றோடொன்று தொட்டுக் கொள்ளுமாறு வைத்துக் கொள்ள வேண்டும்.

பின் முன்னும், பின்னும் என்று கைவிரல் நகங்களை 5-10 நிமிடம் தேய்க்க வேண்டும். இந்த முறையை ஒரு நாளைக்கு 5-10 நிமிடம் என்று 2-3 முறைகள் செய்து வர வேண்டும்.

கை விரலுக்கும் முடிக்கும் தொடர்பு உள்ளதா?

நகத்திற்கு அடியில் உள்ள நரம்பானது மயிர்கால்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. நாம் கைவிரல் நகங்களைத் தேய்க்கும் போது அல்லது அப்பகுதியில் அழுத்தம் கொடுக்கும் போது, ரத்த ஓட்டமானது ஸ்கால்ப்பில் அதிகமாக தூண்டப்படுகிறது.

எனவே முடியின் ஸ்கால்ப்பில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும் போது, மயிர்கால்கள் வலிமையடைந்து, முடி உதிர்வது தடுக்கப்படுகிறது.

கைவிரல் நகம் தேய்க்கும் முறையில் எதை செய்யக் கூடாது?

கைவிரல் நகங்களைத் தேய்க்கும் போது, கட்டை விரலைப் பயன்படுத்தக் கூடாது. ஒருவேளை அப்படி பயன்படுத்தினால், மீசை, தாடி மற்றும் காதுகளில் முடியின் வளர்ச்சி அதிகரிக்கும்.

அறுவை சிகிச்சையை மேற்கொண்டிருந்தால், முக்கியமாக அப்பெண்டிக்ஸ், ஆன்ஜியோகிராபி போன்ற சிகிச்சை செய்தவர்கள் இந்த முறையை செய்யக் கூடாது.

மகப்பேறு காலத்தில் உள்ள பெண்கள் இந்த முறையை செய்யக் கூடாது. ஏனெனில் அது ரத்த அழுத்தத்தை அதிகரித்து, கருப்பையில் இறுக்கத்தை ஏற்படுத்திவிடும்.

உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் இந்த செயலை செய்யக் கூடாது. ஏனெனில் இந்த செயலின் மூலம் ரத்த அழுத்தம் அதிகமாக அதிகரிக்கும்.

கைவிரல் நகங்களைத் தேய்க்கும் போது, மிகுந்த வேகத்திலோ அல்லது கடுமையாகவோ செய்யக் கூடாது. ஏனெனில் அதனால் விரல் நகங்கள் பாதிக்கப்படும்.

கைவிரல் நகங்களில் ஏதேனும் தொற்றுக்கள் ஏற்பட்டிருந்தால், அவர்கள் இந்த செயலை செய்யக் கூடாது.

நன்மைகள்

இந்த வழிமுறையின் மூலம், முடி உதிர்வது தடுக்கப்படுவதோடு, நரைமுடி ஏற்படுவதும் தடுக்கப்படுகிறது.

வழுக்கைத் தலை உள்ளவர்கள், இந்த செயலை தினமும் செய்து வந்தால், ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம். ஆனால் இதற்கு ஒரு வருட காலமாவது ஆகும்.

குறிப்பு

முக்கியமாக இந்த செயலை 10 நிமிடத்திற்கு மேல் செய்யக் கூடாது மற்றும் ஒரு நாளைக்கு 3 முறைக்கு மேல் செய்யக் கூடாது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உடலுறவின் தொடக்கம் இப்படி அமைந்தால் இன்பம்..!!
Next post தனது ஆணுறுப்பால் பஸ்ஸை கட்டி இழுத்த சீன இளைஞர்… அதிர்ச்சி வீடியோ..!!