திருமண காலத்தில் பெண்கள்: அந்த தருணம் எப்படி இருக்கும்?..!!
திருமண வாழ்க்கை தொடரும் காலத்தில் ஆண்களை விட பெண்களுக்கு தான் அதிக எதிர்பார்ப்புகள், குழப்பங்கள், கவலைகள் இருக்கும்.
திருமணத்தின் போது பெண்களின் எதிர்பார்ப்புகள் என்ன?
பெண்கள் திருமணம் ஆன பின் கணவர் மற்றும் கணவர் சார்ந்த உறவுகளுடன் சேர்ந்து வாழ வேண்டும். புது உறவுகள் மட்டுமின்றி புதுவித இடங்கள் என்று அனைத்துமே பெண்களுக்கு புதிதாக இருக்கும்.
மாமனார், மாமியார், நாத்தனார் போன்ற கணவன் வீட்டு உறவுகள் நம்மிடம் எப்படி நடந்துக் கொள்வார்கள், தங்களை எப்படி நடத்துவார்கள் என்ற பயம் அனைத்து பெண்களுக்குமே தோன்றும்.
திருமணம் முடிந்ததும் தாம்பத்தியம் முதல், கணவன் மனைவி மத்தியில் ஏற்படும் பல்வேறு உணர்வுகள் எப்படி இருக்கும் என்ற அச்சம் பல பெண்கள் மத்தியில் இருக்கும்.
திருமணத்திற்கு முன், உள்ள நட்புறவுகளை திருமணத்திற்கு பின் தொடர முடியுமா? இதற்கு வருங்கால கணவர் ஏதேனும் தடைகள் கூறுவாரா? என்ற கேள்விகள் இருக்கும்.
தனது கணவனிடம் நாம் நினைத்த காரியங்களை செய்ய அல்லது கூற முடியுமா? ஒருவேளை அதற்கு அவர்கள் மறுப்பு கூறினால்? என்ன செய்வது என்ற கேள்விகள் இருக்கும்.
இல்லறம், கணவன், மனைவி உறவு என்பதை தாண்டி, பொருளாதாரம், வளர்ச்சி, குடும்ப வரவு, செலவுகளை கண்காணிப்பது போன்றவை பற்றி பெண்களிடம் ஒரு அச்சம் இருக்கும்.
வேலைகளில் மாற்றம் செய்ய வேண்டும். தாய் வீட்டில் இருக்கும் போது எப்போது வேண்டுமானாலும் தூங்கலாம், எப்போது வேண்டுமானாலும் எழுந்திருக்கலாம். ஆனால், புகுந்த வீட்டில் அப்படி இல்லை. எல்லா வேலைகளையும் உடனுக்குடன் செய்ய வேண்டுமே என்று நினைக்க தோன்றும்.
காலை எழுந்து சமைப்பதில் இருந்து, வேலைக்கு கணவனை அனுப்புவது, வேலைக்கு செல்வது, அலுவலக வேலைகள், மீண்டும் வீடு திரும்பி வீட்டு வேலைகள் என்று நேரம் செல்லும், அப்போது தனக்கான பொழுதுபோக்குகள் தடைப்படுமா? என்ற அச்சமும் இருக்கும்.
தாம்பத்யம் மற்றும் குழந்தை பெற்றுக் கொள்வதிலும் பெண்கள் அச்சம் கொள்வார்கள். இதற்கு காரணம் தாம்பத்தியம் வலி மிகுந்ததாக இருக்கும் என்று பொதுவாக கூறும் கருத்துக்கள் தான்.
பெண்கள் தங்களின் வீடு, சேமிப்பு, சந்தோஷம் என்று எப்படியெல்லம் வாழ வேண்டும் என்ற பல கனவுகள் பெண்கள் மத்தியில் இருக்கும். அந்த கனவுகள் எல்லாம் எதிர்காலத்தில் நிறைவேறுமா? என்ற எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கும்
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating