வயிற்று புற்று நோயை தக்காளி தடுக்கும்: புதிய ஆய்வில் தகவல்..!!

Read Time:1 Minute, 40 Second

201705151150142633_Tomato-extracts-The-new-solution-to-fight-stomach-cancer_SECVPFபுற்று நோயை தடுக்கும் தக்காளி அன்றாட உணவில் முக்கிய பங்கு வகிக்கிறது. பெரும்பாலான உணவு வகைகளில் அது சேர்க்கப்பட்டு அதீத சுவை அளிக்கிறது. இத்தகைய தக்காளியில் மருத்துவ குணம் உள்ளது. அதாவது வயிற்று புற்று நோய் வராமல் தடுக்கும் சக்தி இருக்கிறது. இது சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இத்தாலியில் உள்ள ஆன்கோலஜி ஆய்வு மைய நிபுணர் டேனியலா பரோன் தக்காளி குறித்து ஆராய்ச்சி நடத்தினார். வயிற்று புற்று நோயை ‘மாலிக்னன்ட் செல்’ எனப்படும் திசுக்களால் புற்று நோய் ஏற்படுகிறது.

அது பல திசுக்களுக்கும் மிதந்து சென்று அதில் பரவுகிறது. இதன் மூலம் புற்று நோய் வெகுவாக பரவுகிறது. ஆனால் தக்காளி சாறுக்கு புற்று நோயை உருவாக்கும் திசுக்களை மேலும் வளரவிடாமலும், அவை பரவாமலும் தடுக்கும் சக்தி உள்ளது.

இதன் மூலம் வயிற்று புற்று நோய் வராமல் தடுக்கப்படுகிறது. எனவே, உணவில் அதிக அளவு தக்காளி சேர்த்துக் கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த தகவல் செல்லுலார் பிசியாலஜி என்ற மருத்துவ நாளிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிரபல தயாரிப்பாளர் விஷம் குடித்து தற்கொலை..!!
Next post கணவன் படுகொலை: கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவியே கொன்றது அம்பலம்..!!