தாய்க்கு கட்டிய கோவிலை அன்னையர் தினத்தில் திறந்த லாரன்ஸ்: 1000 பெண்களுக்கு சேலை வழங்கினார்..!!
அன்னையர் தினத்தில் நடிகர் லாரன்ஸ் தன் தாய்க்கு கோவில் கட்டி அதனை இன்று திறந்து வைத்தார். 1000 வயதான பெண்களுக்கு சேலையும் வழங்கினார். அன்னையர் தினம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 2-வது ஞாயிற்றுக் கிழமை அன்னையர் தினமாக கொண்டாடப்படுகிறது. நடிகர் ராகவா லாரன்ஸ் அன்னையர் தினத்தில் தனது தாய் கண்மணி அம்மையாரை போற்றும் விதமாக அம்பத்தூரை அடுத்த திருமுல்லைவாயலில் ராகவேந்திரர் பிருந்தாவனத்தில் தனியாக கோவில் கட்டி சிலை நிறுவி உள்ளார்.
அன்னையர் தினமான இன்று, காலை 8.45 மணிக்கு கண்மணி அம்மையாரின் சிலையை ராகவா லாரன்ஸ் முன்னிலையில் சினிமா சண்டை பயிற்சியாளர் சூப்பர் சுப்பராயன் திறந்து வைத்தார். இங்கு கண்மணி அம்மையார் சிலையுடன் காயத்திரி தேவி சிலை, சிவலிங்கமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலைகளையும் திறந்து வைத்து பூஜைகள் செய்து வழிபட்டனர்.
வாழும் போதே தாய்க்கு ஒருவர் கோவில் கட்டி சிலை திறப்பது இதுவே முதல் முறையாகும். இங்கு அமைக்கப்பட்டு இருப்பது பளிங்கு சிலையாகும்.
தாயார் சிலை திறப்பையொட்டி வயதான 1000 பெண்களுக்கு சேலைகளை நடிகர் ராகவா லாரன்ஸ் வழங்கினார். மேலும் நகை அடகுவைத்து மீட்க முடியாமல் தவித்த 11 விவசாயிகளின் நகைகளை மீட்டு வழங்குவேன் என்று அறிவித்து இருந்தார். அதன்படி ஏற்கனவே 5 விவசாயிகளின் நகைகளை மீட்டு கொடுத்தார். இன்று மேலும் 6 விவசாயிகளின் நகைகளை மீட்டு அவர்களிடம் ஒப்படைத்தார். அதை தாலியை மீட்டு தரும் நிகழ்ச்சியாக நடத்தினார்.
விழாவில் ராகவா லாரன்ஸ் தாயார் கண்மணி, மனைவி லதா, மகள் ராகவி, சகோதரர்கள் எல்வின், முரளி, தயாரிப்பாளர் ரவீந்திரன், இயக்குனர் சாய் ரமணி மற்றும் ஏராளமான பொது மக்களும், விவசாயிகளும் கலந்து கொண்டனர். இந்த விழாவுக்கு சினிமா மற்றும் அரசியல் பிரமுகர்கள் வரும் போது பொது மக்களுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் இந்த கோவில் திறந்து 48 நாள் முடிந்து மறுநாள் அவர்களை அழைக்க இருக்கிறார்.
அன்று கலையுலகத்தை சேர்ந்தவர்கள் உட்பட பல துறைகளை சேர்ந்தவர்கள் கலந்து கொள்கிறார்கள். எனது அன்னைக்கு அமைத்துள்ள இந்த ஆலயம் உலகில் உள்ள எல்லா அன்னையர்க்கும் சமர்ப்பணம் என்று ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating