ஜம்மு-காஷ்மீர் போலீஸ் நிலையத்தில் பெண் கற்பழிப்பு..!!

Read Time:1 Minute, 42 Second

201705101537121062_Jammu-woman-alleges-molestation-torture-by-cops-in-police_SECVPFஜம்மு மாவட்டம் கானாசாக் அருகே உள்ள தயரன் பகுதியைச் சேர்ந்த 25 வயது பெண் ஒருவர் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றார். பின்னர், ஜம்மு உயர் போலீஸ் அதிகாரியிடம் அவர் கொடுத்துள்ள புகாரில் கூறி இருப்பதாவது:-

நான் ஒரு வீட்டில் பணிப்பெண்ணாக வேலை பார்த்து வருகிறேன். அந்த வீட்டின் பெண்ணுக்கும் எனக்கும் தகராறு ஏற்பட்டது. வீட்டில் உள்ள பொருட்களை திருடிவிட்டதாக என் மீது பொய்யான புகார் கொடுத்தனர். போலீசார் என்னை கைது செய்து கானாசாக் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு வைத்து போலீஸ் அதிகாரியும், போலீசாரும் என்னை கற்பழித்தனர்.

மேலும் என்னை கடுமையாக சித்ரவதை செய்தனர். எனது ஆடைகளை அவிழ்த்து மிளகாய் பொடி, பீர் பாட்டில்களை வீசினார்கள். எனது கணவன், மாமியார் ஆகியோரையும் தாக்கினர்.

இவ்வாறு அந்த பெண் புகாரில் குற்றம் சாட்டி இருந்தார்.

போலீஸ் நிலையத்தில் பெண் கற்பழிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக ஜம்மு போலீஸ் ஐ.ஜி. விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 2 பெண் குழந்தைகளை தத்தெடுக்கும் மனீஷா கொய்ராலா..!!
Next post புலம்பெயர் தரப்புகளின் தாயக வருகை; சாதித்தவை எவை? (கட்டுரை)