கள்ளக்காதல் விவகாரம்.. காரை ஏற்றிக் கொலை செய்தது ஏன்? கைதான காதலன் பரபரப்பு வாக்குமூலம்..!!

Read Time:5 Minute, 9 Second

murder357-600-04-1483511989-09-1494338672சென்னையில் கள்ளக் காதல் விவகாரத்தில் காரை ஏற்றி ஆசிரியை கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பொள்ளாச்சியைச் சேர்ந்த நிவேதா(47). அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பணியாற்றி வந்தார். இவரது கணவர் ரகு. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். 20 வருடங்களுக்கு முன்பு தம்பதியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் விவாகரத்து பெற்று மகளுடன் வசித்து வந்தார் நிவேதிதா.

ஒரு வருடத்துக்கு முன்பு நிவேதாவின் மகளுக்கு சென்னை அருகே மறைமலைநகரில் வேலை கிடைத்ததால் அவர் மறைமலைநகருக்கு சென்றுவிட்டார். இதனால் கோவையில் தனியாக வசித்து வந்தார் நிவேதிதா. இதனிடையே நிவேதிதாவுக்கும் கோவை தீயணைப்பு துறையில் டிரைவராக பணிபுரியும் இளையராஜா என்பவருக்கும் பழக்கம் இருந்துள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி சந்தித்து கொண்டனர். இந்த நிலையில் நிவேதாவுக்கு பேஸ்புக் மூலம் சென்னை கொளத்தூர் வஜ்ரவேல் நகரைச் சேர்ந்த கணபதி(33) என்பவரது நட்பு கிடைத்தது. திருமணமான கணபதி, தனியார் வங்கியில் வேலை பார்த்து வருகிறார். இதனால் வங்கியில் லோன் பெற்று தருவதாக நிவேதாவிடம் சொல்லியுள்ளார்.

இதனால் இருவரும் பேஸ்புக் மூலம் பேசி நட்பை மேலும் வளர்த்துக் கொண்டனர். இருவரும் போட்டோக்களை பரிமாறிக் கொள்வது, அதற்கு லைக் தெரிவிப்பது, விமர்சனம் செய்வது என நாளுக்கு நாள் நட்பை வளர்த்து வந்துள்ளனர். ஒருகட்டத்தில் எந்நேரமும் நிவேதா பேஸ்புக்கிலேயே மூழ்கி கிடந்தார். கணபதியுடனான நட்பால் காதலர் இளையராஜாவை மறக்கும் அளவுக்கு சென்று விட்டார் நிவேதிதா. இந்தவிவகாரம் இளையராஜவுக்கு தெரியவந்ததும் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என முடிவெடுத்த இளையராஜா, நேற்று முன்தினம் நிவேதாவைக் கூட்டிக் கொண்டு கோவையில் இருந்து காரில் சென்னை வந்தார். வழியில் மறைமலைநகரில் மகளை பார்த்துவிட்டு, அண்ணாநகருக்கு வந்தடைந்தனர். பின்னர் இருந்து கணபதியை அழைத்தார். அவர் அங்கு வந்த பின் மூவரும் அங்கு சில நேரம் பேசிக்கொண்டிருந்தனர். அதன்பின், நிவேதாவுடனான நட்பை முறித்துக்கொள்வதாக கணபதி கூறினார். இருந்தாலும், நிவேதாவுடன் சில நிமிடங்கள் தனியாக பேசி விட்டு வருகிறேன் எனக் கூறி, நிவேதாவை அழைத்து சென்றார். இதை காரில் இருந்து கவனித்துக்கொண்டிருந்த இளையராஜா ஆத்திரம் அடைந்துள்ளார். திடீரென நிவேதாவுக்கும், கணபதிக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர் இருவரும் சமாதானமாக சென்றுவிட்டனர். இதை பார்த்த இளையராஜாவுக்கு மேலும் ஆத்திரம் ஏற்பட்டதால் காரை வேகமாக ஓட்டி இருவர் மீதும் மோதியுள்ளார். இதில் நிவேதாவின் கால் முறிந்தது. கணபதி தப்பினார். பின்னர் கீழ்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிவேதிதா உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும் அண்ணாநகர் போக்குவரத்து போலீசார் விரைந்து இளையராஜா, கணபதி ஆகியோரை தனித்தனியாக விசாரித்ததில் நிவேதாவை காரை ஏற்றி கொன்றதை இளையராஜா ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து இளையராஜாவை போலீசார் கைது செய்தனர். போலீசாரிடம் இளையராஜா கூறுகையில், ‘நிவேதாவின் பக்கத்து வீட்டில் வசித்து வந்தேன். அவருடன் நட்பாக பழகினேன். கணபதியுடன் பழக்கம் ஏற்பட்டது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. என்னிடம் பழகிவிட்டு அவனுடனும் பழகியதால் நிவேதாவை காரை ஏற்றி கொலை செய்தேன்’ என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சோகம்: சிறுவனை விழுங்கிய பாம்பின் வயிற்றைக் கிழித்தும் மீட்க முடியாமல் போன சோகம் நேரடி வீடியோ காட்சி..!!
Next post ரிலீசாவதற்கு முன்பே சர்வதேச திரைப்பட விழாவில் பாராட்டுக்களை பெற்ற `ஒரு கிடாயின் கருணை மனு’..!!