கிïபா அதிபர் பிடல் காஸ்ட்ரோ முன்பை விட நல்ல உடல் நலத்துடன் உள்ளார்
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கிïபா அதிபர் பிடல் காஸ்ட்ரோ வீடியோ படத்தில் தோன்றினார். அவர் முன்பைவிட நல்ல உடல்நலத்துடன் உள்ளார். கம்ïனிச நாடான கிïபாவை கடந்த 47 ஆண்டுகளாக ஆண்டு வருபவர் பிடல் காஸ்ட்ரோ. இவர் அமெரிக்காவை எதிர்த்து ஆட்சி நடத்தி வருகிறார். 80 வயதான காஸ்ட்ரோ, குடலில் ரத்த கசிவால் அவதிப்படுகிறார். அதனால் அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்காக கடந்த ஜுலை 31-ந் தேதி அதிபர் பொறுப்புகளை தனது தம்பியும், ராணுவ மந்திரியுமான ரவுல் காஸ்ட்ரோவிடம் ஒப்படைத்தார்.
வதந்திகள்
அதன் பிறகு காஸ்ட்ரோ வெளியுலகின் பார்வையிலேயே படவில்லை. அதனால் அவரது உடல் நிலை பற்றி ஏராளமான வதந்திகள் வெளியாகின. அவர் மரணம் அடைந்து விட்டதாகவும் கூறப்பட்டது.
வீடியோ படத்தில் தோன்றினார்
இந்நிலையில் இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பிடல் காஸ்ட்ரோ வீடியோ படத்தில் தோன்றினார். வெனிசுலா நாட்டு அதிபர் குகோ சாவேஸ், சீனா, சிரியா, அங்கோலா ஆகிய நாடுகளுக்கு சென்றுவிட்டு கிïபாவுக்கு வந்தார்.
அவர் அங்கு காஸ்ட்ரோவை சந்தித்தார். இச்சந்திப்புதான் கிïபா நாட்டு டெலிவிஷனில் காட்டப்பட்டது. இச்சந்திப்பு நடந்த இடம், ஆஸ்பத்திரி அறை போல தோன்றுகிறது.
சிரித்தபடி வரவேற்பு
வீடியோ படத்தில், சிவப்பு நிற பைஜாமா அணிந்து படுக்கையில் சிரித்தபடி காட்சி அளிக்கும் காஸ்ட்ரோ, வெனிசுலா அதிபரையும், அவருடன் வந்த 2 சிறுமிகளையும் புன்னகையுடன் வரவேற்கிறார். காஸ்ட்ரோவும், வெனிசுலா அதிபரும் கட்டி தழுவுகிறார்கள். பிறகு காதோடு காதாக, `சகோதரரே, தங்கள் வருகைக்கு பல லட்சம் நன்றிகள்’ என்று காஸ்ட்ரோ சொல்வது, வீடியோ படத்தில் பதிவாகியுள்ளது.
தனது புரட்சிகரமான ஆட்சிமுறையின் வாரிசாக வெனிசுலா அதிபரை பார்ப்பதாகவும் காஸ்ட்ரோ இந்த படத்தில் கூறுகிறார். அமெரிக்காவின் பொருளாதார தடையை மீறி கிïபாவுக்கு வெனிசுலா நாடு பெட்ரோல் சப்ளை செய்தது குறிப்பிடத்தக்கது.
பேச்சுவார்த்தை
அடுத்த காட்சியில் எதிர் எதிரே இரு நாற்காலிகளில் காஸ்ட்ரோவும், வெனிசுலா அதிபரும் அமர்ந்து சர்வதேச விவகாரங்கள் பற்றி பேச்சுவார்த்தை நடத்துவது தெரிகிறது. இறுதியில் இருவரும் இணைந்து `நாம் எப்போதும் வெற்றி பெறுவோம்’ என்று சொல்வதுடன் வீடியோ படம் முடிவடைகிறது. இப்படம் 7 நிமிடங்கள் ஓடுகிறது.
நல்ல உடல் நலம்
இதற்கு முன்பு காஸ்ட்ரோ இடம் பெற்ற வீடியோ காட்சி, கடந்த மாதம் 13-ந் தேதி ஒளிபரப்பானது. அப்போது காஸ்ட்ரோவின் 80-வது பிறந்த நாளை முன்னிட்டு வெனிசுலா நாட்டு அதிபர் குகோ சாவேஸ், அவரை சந்தித்த காட்சி டெலிவிஷனில் காட்டப்பட்டது. அப்போது படுக்கையில் சிவப்பு போர்வையை போர்த்தி படுத்தபடி காஸ்ட்ரோ காட்சி அளித்தார்.
அப்போது இருந்ததைவிட நேற்று முன்தினம் காட்டப்பட்ட வீடியோ படத்தில் அவர் நல்ல உடல் நலத்துடன் இருந்தார்.
வெனிசுலா நாட்டு அதிபரை விமான நிலையத்தில் வரவேற்கும் காட்சியில் மட்டும் தற்காலிக அதிபர் ரவுல் காஸ்ட்ரோ காட்டப்பட்டார். அவர் வெனிசுலா அதிபருடன் சர்வதேச விவகாரங்களë குறித்து 2 மணி நேரம் பேச்சு வார்த்தை நடத்தினார்.