கடையம் அருகே ஊனமுற்ற பெண்ணை கற்பழித்து கர்ப்பிணியாக்கிய வாலிபர் கைது..!!

Read Time:2 Minute, 20 Second

arrest (5)நெல்லை மாவட்டம் கடையம் அருகே உள்ள கோதண்டராமபுரம் பகுதியை சேர்ந்தவர் ராணி (வயது38). (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் 2 கால்களும் நடக்க முடியாமல் ஊனமுற்றவர். இதனால் இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவரது வீட்டருகே மாடசாமி என்பவரது மகன் முருகன் (20) வசித்து வந்தார்.

ஊனமுற்ற பெண் வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த முருகன் அடிக்கடி அவரது வீட்டிற்கு சென்று பேசினார். இதில் அந்த பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்தார். இதில் அந்த பெண் 8 மாத கர்ப்பிணியானார். அந்த பெண்ணின் வயிறு பெரிது ஆனதால் அவரது பெற்றோர் விசாரித்த போது முருகன் ஏமாற்றி உல்லாசம் அனுபவித்தது தெரியவந்தது. முருகனிடம் அந்த பெண்ணை திருமணம் செய்ய வலியுறுத்திய போது அவர் முடியாது என்று மறுத்து ஓட்டம் பிடித்தார்.

இதுகுறித்து ராணி அம்பை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துலெட்சுமி மற்றும் பெண் போலீசார் விசாரணை நடத்தி முருகனை கைது செய்தார்கள்.

இந்த நிலையில் 8 மாத கர்ப்பிணியான ராணிக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் பாளை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு நேற்று ராணிக்கு குழந்தை பிறந்தது. ஆனால் வளர்ச்சி குறைவாக இருந்ததால் சிறிது நேரத்தில் அந்த குழந்தை பரிதாபமாக இறந்தது. இதுகுறித்து ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதுகுறித்தும் மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புறக்கணிக்கப்படும் கூட்டுறவுத் துறை..!! (கட்டுரை)
Next post கட்டப்பா வேடத்தில் சத்யராஜ்- ரகசியத்தை ட்விட்டரில் வெளியிட்ட நடிகை குஷ்பு..!! (வீடியோ)