டாஸ்மாக் கடைகளை மூடச்சொல்லி உருவாகியிருக்கும் ‘திறப்பு விழா’..!!
இன்று ‘டாஸ்மாக்’ எதிராக தமிழகம் முழுவதும் நடந்து வரும் மக்கள் போராட்டத்தை திரைக்கதையாக்கி, காதல் காட்சிகளுடன் பொழுதுபோக்கு அம்சங்கள் கலந்து ஜனரஞ்சக ‘திறப்பு விழா’ என்ற படமாக உருவாக்கியுள்ளனர். இந்த படத்தை டைரக்டர் ஹரியிடம் ‘வேங்கை’, ‘சிங்கம்’, ‘பூஜை’ போன்ற படங்களில் அசோஸியேட்டாக பணியாற்றிய கே.ஜி.வீரமணி என்பவர் இயக்கியிருக்கிறார்.
இப்படத்திற்கான படப்பிடிப்புகள் விருதாச்சலம், நெய்வேலி, கல்பாக்கம், சென்னை போன்ற இடங்களில் நடத்தி முடிக்கப்பட்டது. எடிட்டிங், டப்பிங், மிக்ஸிங் வேலைகளும் மும்முரமாக நடந்து முடிவடைந்திருக்கிறது. இந்தப்படத்தை இம்மாதம் வெளியிடுவதற்கான ஏற்பாடுகளும் செய்து வருகிறார்கள்.
இதில் புதுமுக நடிகர் ஜெயஆனந்த் கதாநாயகனாக நடிக்க பல படங்களில் கதாநாயகியாக நடித்துவரும் ரஹானா கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் மனோபாலா, ஜி.எம்.குமார், ‘பசங்க’ சிவக்குமார், ‘ரோபோ’ சங்கர், சூப்பர் குட் லட்சுமணன், சிசர் மனோகர், ‘நாதஸ்வரம்’ முனீஸ், கவிதா பாலாஜி, ரெங்க நாயகி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – ஆர்.பி.செல்வா, இசை – வசந்த ரமேஷ், பாடல்களை மறைந்த பாடலாசியரியர் நா.முத்துக்குமார் மற்றும் பழநிபாரதி, நந்தலாலா, ச.ஞானக்கரவேல், நிலம் ஆகியோர் எழுதியுள்ளனர். வசந்த ரமேஷ் என்பவர் இசையமைத்திருக்கிறார். ஆர்.பி.செல்வா ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தை பூமிகா இன்ப்ராடெவலப்பர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து எம்.ஜெரினா பேகம் தயாரித்துள்ளார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating