இரண்டே நாட்களில் பிம்பிளால் வந்த தழும்புகளை மறைக்க…!!
வெயில் காலம் என்பதால் பலரும் பிம்பிளால் அவஸ்தைப்படுவார்கள். பிம்பிள் வந்தால், அது கடுமையான வலியை உண்டாக்குவதோடு, போகும் போது கருமையான மற்றும் அசிங்கமான தழும்புகளை விட்டுச் செல்லும். இந்த தழும்புகள் தானாக மறைய பல நாட்கள் ஆகும்.
ஆனால் நம் வீட்டில் உள்ள சில பொருட்களைக் கொண்டு சருமத்திற்கு பராமரிப்பு கொடுத்து வந்தால், விரைவிலேயே பருக்களால் வந்த தழும்புகளைப் போக்கலாம். இங்கு முகத்தில் அசிங்கமாக உள்ள தழும்புகளை மறைக்க உதவும் சில எளிய இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் பயன்படுத்தினால், இரண்டே நாட்களில் தழும்புகள் மறைந்துவிடும்.
தேங்காய் எண்ணெய்
தினமும் தேங்காய் எண்ணெயை பருக்கள் விட்டு சென்ற தழும்புகள் மீது தடவி மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். இதனால் தேங்காய் எண்ணெயில் உள்ள அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் ஃபேட்டி அமிலங்கள், தழும்புகளை மறையச் செய்யும்.
உருளைக்கிழங்கு ஜூஸ்
உருளைக்கிழங்கு ஜூஸில் உள்ள ப்ளீச்சிங் தன்மை, வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் போன்றவை, தழும்புகளை எளிதில் மறையச் செய்யும். அதற்கு தினமும் உருளைக்கிழங்கு சாற்றினை முகத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
வெந்தயம்
வெந்தயத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் ஏராளமான அளவில் உள்ளது. இது பருக்கள் வருவதைத் தடுப்பதோடு, தழும்புகளையும் போக்கும். அதற்கு வெந்தயத்தை நீரில் ஊற வைத்து, அரைத்து பேஸ்ட் செய்து, பரு தழும்புகளின் மீது தடவி ஊற வைத்து கழுவ வேண்டும்.
எலுமிச்சை மற்றும் பேக்கிங் சோடா மாஸ்க்
1 ஸ்பூன் பேக்கிங் சோடாவுடன் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து பேஸ்ட் செய்து, பருக்களால் வந்த தழும்புகள் மீது தடவி சிறிது நேரம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
கிளிசரின்
பலருக்கும் கிளிசரின் பருக்களால் வந்த தழும்புகளை மறைக்க உதவும் எனத் தெரியாது. ஆனால் கிளிசரின் தழும்புகளைப் போக்குவதோடு, சரும பொலிவை மேம்படுத்தவும் உதவும். அதற்கு 1 ஸ்பூன் கிளிசரினுடன், சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 2 முறை செய்து வந்தால், விரைவில் தழும்புகள் மறையும்.
கற்றாழை ஜெல்
கற்றாழை ஜெல்லில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள், பருக்களால் வந்த தழும்புகளை எளிதில் மறையச் செய்து, அரிப்பைத் தடுக்கும். அதற்கு தினமும் கற்றாழை ஜெல்லை பருக்கள் வந்து போன இடத்தில் தடவி ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
கடலை மாவு மற்றும் தயிர்
2 ஸ்பூன் கடலை மாவை தயிர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 1 மணிநேரம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 2 முறை செய்தால் தழும்புகள் வேகமாக மறையும். இதற்கு தயிரில் உள்ள நொதிகளும், கடலை மாவில் உள்ள ப்ளீச்சிங் பண்புகளும் தான் முக்கிய காரணம்.
வெள்ளரிக்காய்
வெள்ளரிக்காயை அரைத்து, அந்த பேஸ்ட் உடன் 1/2 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 30 நிமிடம் கழித்து, கழுவ வேண்டும்.
Average Rating