பிரியாணியில் இருந்து அதிக வாசனை வருகிறது: அபராதம் விதித்த லண்டன் நீதிமன்றம்..!!

Read Time:1 Minute, 44 Second

625.500.560.350.160.300.053.800.748.160.70லண்டனில் உள்ள உணவகம் ஒன்றில் இருந்து வெளிவந்த பிரியாணி வாசனையால் உணவக உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியர்களான சபானா முகமது குஷி தம்பதியினர் லண்டனில் உள்ள Linthorpe என்ற கிராமத்தில் உணவகம் ஒன்றை நடத்தி வந்துள்ளனர்.

அந்த உணவகத்தில், இந்திய உணவுகளான பிரியாணி, பஞ்சி, பஞ்சாபி உணவுகள் ஆகியவற்றை விற்பனை செய்துள்ளனர். இதில் பிரியாணியின் வாசனை மிகவும் அதிகமாக இருந்துள்ளது.

பிரியாணியின் வாசனை துணிகளின் மீது படுவதால், அந்த துணிகளை துவைத்தால் மட்டுமே அந்த வாசனை துணிகளில் இருந்து செல்கிறது என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியதோடு மட்டுமல்லாமல் முகமது மீது வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கினை விசாரித்த மாவட்ட நீதிபதி கிரிஸ்டினா ஹாரிசன், உணவக உரிமையாளருக்கு 258 பவுண்ட்ஸ் அபராதமும், வழக்கு செலவாக 500 பவுண்ட்ஸ் மற்றும் பாதிப்பட்டடோருக்கு 30 பவுண்ட்ஸ் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து உணவக உரிமையாளர் முகமது கூறியதாவது, எங்கள் தொழிலை மிகவும் வெற்றிகரமாக நடத்தி வந்தோம். இந்த தீர்ப்பு எங்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது என கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இதயநோயின் பிடியில் இருந்து தற்காத்துக்கொள்ள செய்ய வேண்டியவை..!!
Next post செக்ஸ் உறவுக்கு தொடக்கம் எப்பவும் சரியாய் இருக்கணும்..!!