செக்ஸ் ரோபோட், பொம்மைகளால் அபாயம்…!!

Read Time:5 Minute, 33 Second

sex-robo-350x227தாம்பத்தியம் என்பது எல்லா உயிர்கள் மத்தியிலும் ஓர் உணர்ச்சியின் காரணமாக எழும் ஒரு செயற்பாடு. ஒவ்வொரு உயிரினங்களும் அதற்கு ஏற்ற ஒரு காலக்கட்டத்தில் இனப்பெருக்க செயலில் ஈடுபடும்.
ஆனால், மனிதர்களாகிய நாம் தான் ஆறாம் அறிவை பெற்று அதை வேண்டும் போதெல்லாம், கண்ணில் இச்சை எண்ணம் பெருகும் போதெல்லாம் ஈடுபட்டு இனப்பெருக்கத்தை ஒரு குற்ற செயலாக மாற்றி வைத்துள்ளோம்.

செக்ஸ் ஒரு செயற்பாடு என்பதை தான் மனிதர்கள் மத்தியில் தான் ஒரு தொழிலாகவும் திகழ்ந்து வருகிறது. இப்போது இதற்கு அடுத்தக்கட்டமாய் பாலியல் விஷயங்களுக்கு என செக்ஸ் ரோபோட், பொம்மைகளை சமீப வருடங்களில் பல நிறுவனங்கள் தயாரித்து வருகின்றன.

இது கண்டிப்பாக மனித உறவுகளில் பலவகையான எதிர்மறை தாக்கங்களை உண்டாக்கும் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை…

உணர்ச்சி!
தாம்பத்தியம் என்பது ஒரு சூழலில் மனதில் தானாக எழும் உணர்சியின்பால் உண்டாகும் ஒரு செயற்பாடு. எப்படி முன்பு கிரிக்கெட் விளையாட மைதானம் சென்ற போது இருந்த உடல் ஆரோக்கியம், இன்று மொபைலில் விளையாடும் கிரிக்கெட்டின் போது காணாமல் போனதோ. அப்படி தான், உண்மையான தாம்பத்தியம் போய், போலி தாம்பத்தியம் அதிகரிக்கும் போது உணர்ச்சி, உணர்வு சார்ந்த ஆரோக்கியம் குறைந்து போகும்.

உறவுகள்!
இதுநாள் வரை இந்திந்த குணங்களில் ஒரு துணை வேண்டும் என்ற விருப்பம் இருப்பது மாறி, வரும் காலத்தில் மனிதர்கள் எனக்கு இந்திந்த அளவில் இருக்கும் துணை வேண்டும் என செக்ஸ் ரோபோட், செக்ஸ் பொம்மைகளை தேடி போகும் நிலை உருவாகும். இப்போதே உலகில் சிலர் செக்ஸ் பொம்மைகளை திருமணம் செய்து கொண்ட நிகழ்வுகளை நாம் கண்டு தானே வருகிறோம்.

மன அழுத்தம்!
மன அழுததை குறைக்க நம்மிடம் இருக்கும் ஒரே இயற்கை மருந்து, நம்மை சுற்றி இருக்கும் நல்ல உறவுகள் தான். வேறு எந்த ஒரு ஆங்கில மருந்துகளாலும் மன அழுத்தத்தை சரி செய்ய முடியாது. நம்மிடம் இருக்கும் இந்த இயற்கை மருந்தை நிச்சயம் இந்த செக்ஸ் ரோபோட்கள் அழிக்கும்.

நேர்மறை விளைவுகள்!
ஓர் உறவின் மீது இருக்கும் ஈர்பானது அவர்களது குணாதிசயங்கள் சார்ந்து இருக்க வேண்டும். இது தான் நம்மை சுற்றி ஒரு எதிர்மறை விளைவுகள், தாக்கங்கள் ஏற்பட காரணியாக அமையும். செக்ஸ் ரோபோட்கள் அதிகரிக்கும் பட்சத்தில் நம்மை சுற்றி எலக்ட்ரானிக் கருவிகள் மட்டும் தான் இருக்குமே தவிர, மனதில் நேர்மறை எண்ணங்கள் வளர்க்க உதவியாக எந்த உறவும் இருக்காது.

செக்ஸ் மட்டுமே வாழ்க்கை!
செக்ஸ் மீதான எண்ணங்கள் அதிகரிப்பதால், செக்ஸ் மட்டுமே போதும் என்ற ஆசை பெருகுவதால் இல்லறத்தில் மட்டுமின்றி மனநலத்திலும் பல தீய விளைவுகள் உண்டாகின்றன என பல ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. செக்ஸ் பொம்மைகள் வீடுகளில் குடிபுகும் பட்சத்தில் மனிதர்களின் மனநலம் மெல்லே, மெல்ல சீரழியவும் வாய்ப்புகள் உண்டு.

குடும்பம்!
கண்டிப்பாக செக்ஸ் ரோபோட்கள் குழந்தை பெற்று தராது. மேலும், செக்ஸ் ரோபோட் உடன் வாழும் ஒருவருடன் வேறு எந்த நபரும் இனைந்து வாழ மாட்டார். இதுபோன்ற காரணத்தால் குடும்பம் எனும் உறவு வழக்கமே கூட மெல்ல, மெல்ல மறைந்து போகும் நிலை உண்டாகி. ஆளாலுக்கு தனி மரமாக வாழும் நிலை உண்டாகும்.

மக்கள் எண்ணிக்கை!
நாம் இருவர், நமக்கு இருவர் போய், நாம் இருவர் நமக்கு ஒருவர் வந்தும் கூட மக்கள் எண்ணிக்கை குறைந்த பாடில்லை. ஒருவேளை இந்த செக்ஸ் ரோபோட்களால் ஏற்படும் ஒரே நன்மை, மக்கள் தொகை வெகுவாக குறையும், அவ்வளவு தான்.

இதுவும் கூட மனிதர்களின் வாழ்க்கையில் தீய விளைவாக தான் அமையும். ஒட்டுமொத்தமாக மனித இனம் அழிய, மனிதனே கண்டுபிடித்த ஒரு அற்புத கண்டுபிடிப்பாக இந்த செக்ஸ் ரோபோட்கள் அமையலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாம்பு ஆடையை மாற்றும் வைரல் காட்சி..!! (வீடியோ)
Next post கன்னத்தில் உள்ள கொழுப்புகளை கரைக்க என்ன செய்ய வேண்டும்?..!!