உறவு அனைவருக்கும் அவசியம் என்கிறது காமசூத்திரம்…!!
மலரினும் மெல்லிது காமம்’ என்று உலக பொதுமறையான திருக்குறளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய நாட்டில் ஆண் பெண் உறவை விளக்கும் காஜுராகோ சிற்பங்களும், காமசூத்ரம் போன்ற நூல்களும் எழுதப்பட்டுள்ளன. நமது உடலிலுள்ள ஒவ்வொரு அணுவும் காம அணுக்கள்தான். ஆண்-பெண் எனும் இரு காம அணுக்களின் கூட்டு வடிவம்தான் மனித உடல். ஆக, மனித படைப்பின் மூலாதாரமே பாலுணர்வுதான்.
மனிதஉணர்வுகளிலே முதன்மையானதும் பாலுணர்வுதான். இது உலகிலுள்ள அனைவருக்கும் பொருந்தும். எனவே பாலுணர்வு என்பது குற்றமானது அல்ல. சுவசம் போல, இதயத்துடிப்பு போல மனித உடலில் அது இயற்கையானது. பாலுணர்வை நாம் முறையாக பயன்படுத்துகின்றபோது அது ஆரோக்கியமானதாகிறது. முறையற்ற உறவில் ஈடுபடும் போதுதான் ஆரோக்கிய மற்றதாகி விடுகிறது.
மனிதர்கள் வாழும் நில அமைப்பு,அங்கு நிலவுகின்ற தட்பவெட்ப நிலைகள் இவைகளில் அடிப்படையில்தான் நாம் பாலுணர்வை வெளிப்படுத்தி வருகிறோம். மனித இனத்தில் ஆண்-பெண் எனஇரு பிரிவினருக்கும் மாதத்தில் ஒரு குறிப்பிட்ட நாட்களின்போது, பாலுணர்வுகள் இயற்கையாகவே உற்றெடுக்கும் இதுதான் அறிவியல் பூர்வமான உண்மை என பலஉளவியல் அறிஞர்கள் தெரிவித்துள்ளனர். எனவே ஆணும், பெண்ணும், ஒரு குறிப்பிட்ட பருவ வயதிற்கு வந்தபின்னர், தவறாமல் உடலுறவு கொள்ள வேண்டியது அவசியம் என்கிறது காமசூத்திரம்.
மரபணுவில் பதியப்படும் உண்மை
குழந்தையானது கருவிலேயே ஆண், பெண் என தீர்மானிக்கப்படுகிறது. அப்படித் தீர்மானிக்கப்படும் போதே, அந்தக் குழந்தையின் மரபணுக்களில் கோட் வேட் போல சில சங்கேதக்குறிப்புகள் எழுதப்பட்டுவிடுகின்றன. அதில் அந்தக்குழந்தையின் உடல் வளர்ச்சி, மனவளர்ச்சி, அதன் அறிவு, ஆற்றல் என அனைத்துமே பதிவு செய்யப்பட்டு விடும்.
அதன்படியே அந்தக்குழந்தையின் உடல் வளர்ச்சி, பருவம் அடைதல் அனைத்துமே, ஏற்கனவே எழுதப்பட்டது போல, நடந்து கொண்டே வரும்., அதை யார் நினைத்தாலும் மாற்றி அமைக்க முடியாது. அதன்படிதான் ஆண், பெண் உடலில் ஒரு குறிப்பிட்ட காலம் வந்து, பருவம் அடைந்ததும், ஆணுக்கு, விந்துப்பை வளர்ச்சி அடைந்து, விந்து உற்பத்தியும் தொடங்கிவிடுகிறது. அதே போல, பெண்ணுக்கு, பருவம் அடைந்தது முதல், கருப்பையும் வளர்ச்சி அடைந்து, ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில், கருமுட்டைகளும் உற்பத்தியாகின்றன. இதில் சில விதிமுறைகள் உண்டு. அவற்றை மீறினால் இயற்கைக்குப் புறம்பாக நடக்கும் போது விளைவுகள் ஏற்படுகின்றன.
ஆண் பெண் உறவு அவசியம்
ஆணுக்கு விந்து நன்றாகச் சுரக்க ஆரம்பித்த பிறகும், அதை அவன் வெளியேற்றாமல் நீண்ட நாட்களாக அடக்கி வைத்துக்கொண்டே அந்த விந்து உள்ளேயே தேங்கி, அதனால் பின்விளைவுகளாக சில உடல் கோளாறுகளும் உண்டாக ஆரம்பிக்கும். தவிர, எந்த ஒரு உறுப்பை நாம் பயன்படுத்தாமல் விடுகிறோமோ அந்த உறுப்பானது நாளடைவில், அதன் செயல்திறனை இழப்பதோடு மட்டுமின்றி அது தன்னளவில் சுருங்கி இறுதியில் மறைந்து போகும். இது டார்வின் கண்டறிந்த உண்மை. அந்த வகையில், ஆண், பெண்களின் பாலியல் உறுப்புகளுக்கும் இது பொருந்தும். எனவே,அவைகளுக்கும் மிதமான வேலை கொடுக்க வேண்டியது முக்கியம். அப்படித் தராவிட்டால், அந்த ஆணுக்கோ, பெண்ணுக்கோ, உடல் ரீதியான, மன ரீதியான கோளாறுகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
உடல்நலக் கோளாறுகள்
அடிக்கடி உடலுறவு வைத்துக்கொண்டால், உடல் நலம் கெட்டுப்போகும் என்ற அதீத பயத்தின் காரணமாக, ஒரு சில தம்பதியர் நெடு நாட்களாக உடலுறவே வைத்துக்கொள்ளாமல் இருப்பார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு, நரம்பு சம்பந்தமான பலவீனங்கள்., மனநோய், அஜீரணக்கேளாறுகள், இதயநோய், தலைநோய், தலைபாரம் போன்ற நோய்கள் தோன்ற வாய்ப்பு உள்ளது என்கின்றனர் மருத்துவர்கள். எனவே உடல் பக்குவம் அடைந்து திருமணம் ஆனவர்கள், காலம் தவறாமல் உடலுறவு வைத்துக்கொள்வது அவசியம் என்கிறது காமசூத்திரம்.
Average Rating