இறைச்சியில் உள்ள ஈரல், குடல் போன்ற உறுப்புகளை யாரெல்லாம் சாப்பிடக் கூடாது..!!

Read Time:2 Minute, 43 Second

201704271402542334_meat-body-of-liver-and-bowel-should-not-eat_SECVPFபொதுவா அசைவத்தை சாப்பிடுபவர்கள் உறுப்புகளை தனித்தனியே அதிகம் விரும்பி சாப்பிடுவதில்லை. சதைப்பகுதியை சாப்பிடுவதையே விருப்பமாக கொண்டிருப்பார்கள். அதுவும் ஆடு, மாடு, பன்றி இறைச்சி, கோழி போன்றவற்றின் உறுப்புகளையே அதிகம் சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருப்போம். உண்மையில் சதைப்பகுதியை விட அவற்றின் மூளை, குடல் ஈரல், ஆகியவைகள் மிகவும் சத்துக்கள் உடையவை. எந்த உறுப்பு எந்த மாதிரியான நன்மைகள் தருகிறது என பார்க்கலாம்.

கல்லீரல் : இது மல்டி விட்டமின் அடங்கியது. நச்சுக்களை வெளியேற்றுகிறது. உறுப்பு இறைச்சிகளிலேயே அதிக சக்தியை கொண்ட சக்தி கோபுரமாக விளங்குகிறது.

சிறு நீரகம் : மனிதனைப் போலவே மிருகங்களுக்கும் இர்ண்டு சிறு நீரகங்கள் உள்ளன. இவை நச்சுக்களையும் கழிவுகளையும் அகற்ற உதவுகிறது.

மூளை : இது மிகவும் நுட்பமானதாக இருக்கும். சிக்கலுடைய உறுப்பு என்றாலும் அதிக ஒமேகா3 அமினோ அமிலங்கள் நிரம்பியது.

உறுப்புகளில் மிகவும் அதிகப்படியான இரும்புச் சத்து கொண்டிருக்கிறது. தாவரங்களில் இருப்பதை விட உறுப்பு இறைச்சிகளில் அதிகமாக இருக்கிறது.

இறைச்சியின் சதைப்பகுதியை விட உறுப்புக்களை சாப்பிடுவதால் வயிறு விரைவில் நிரம்பிவிடுகிறது. அதோடு பசியும் உடனே எடுப்பதில்லை.

உறுப்பு இறைச்சிகளில் அதிக கொலைன் இருப்பதால் அவை மூளைக்கு தேவையான சக்தியையும் வலுவையும் தருகிறது.

உறுப்பு இறைச்சி சதைப்பகுதியைக் காட்டிலும் விலை மலிவானது. ஆரோக்கியமானதும் கூட. உங்களின் தசை வலிமையை அதிகப்படுத்தும்.

ஆர்த்ரைடிஸ், கர்ப்பிணிகள் குறைவாக சாப்பிடுவது நல்லது. ஏனென்றால் இவை அதிக யூரிக் அமிலத்தை உற்பத்தி செய்வதால் ஆர்த்ரைடிஸ் இருப்பவர்களுக்கு வலியை உண்டாக்கும். மற்றபடி பெரிதான மைனஸ் பாயிண்டுகள் எதுவும் இல்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இந்த வீடியோவைப் பாருங்கள் நிச்சயம் உங்களை வசீகரிக்கும்..!! (வீடியோ)
Next post நிஜத்தில் உதவி இயக்குனரான நயன்தாரா..!!