உடல் ஆரோக்கியம் பாழாகாமல் இருக்க சாப்பிட வேண்டிய ஆரோக்கிய உணவுகள்..!!!

Read Time:3 Minute, 45 Second

201704221430040185_Health-foods-that-are-to-be-eaten-without-physical-health_SECVPFதற்போதைய அவசர உலகில் ஃபாஸ்ட் புட் மற்றும் ஜங்க் உணவுகளையே பெரும்பாலான மக்கள் தினந்தோறும் சாப்பிடுகின்றனர். இப்படி ஆரோக்கியமற்ற உணவுகளை அன்றாடம் சாப்பிடுவதால், உடலின் பல முக்கிய செயல்பாடுகள் பாதிக்கப்பட்டு, பல்வேறு உடல் நல பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.

ஆரோக்கியமற்றது என்று தெரிந்தும், நம்மால் வாயைக் கட்டிப் போட முடியாமல் வாங்கி ஒரு நாளில் ஒன்றும் ஆகாது என்று சாப்பிட்டுவிடுகிறோம். ஆனால் எப்போது இம்மாதிரியான உணவுகளை உட்கொண்டாலும், அதனால் தீங்கை கட்டாயம் சந்திக்கக்கூடும். ஃபாஸ்ட் புட் மற்றும் ஜங்க் உணவுகளால் உடல் ஆரோக்கியம் பாழாகாமல் இருக்க சாப்பிட வேண்டிய சில ஆரோக்கிய உணவுகளைப் பட்டியலிட்டுள்ளது.

க்ரீன் டீ உணவுகளின் மீதான அதிகப்படியான நாட்டத்தைத் தடுக்கும் மற்றும் ஜங்க் உணவுகளால் உடல் செல்கள் பாதிக்கப்படுவதையும் தடுக்கும்.

முட்டை மற்றும் காய்கறிகளால் தயாரிக்கப்பட்ட ஆம்லெட்டை சாப்பிட்டால், அது பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் மதுவால் உடல் ஆரோக்கியம் பாழாவதைத் தடுக்கும்.

தயிரில் பெர்ரிப் பழங்களைத் துண்டுகளாக்கி, ஜங்க் உணவுகளை உட்கொண்ட பின் சாப்பிட்டால், அது குடலில் அழற்சி அல்லது காயங்கள் ஏற்படுவதைக் கட்டுப்படுத்தி, செரிமான கோளாறுகள் வராமலும் தடுக்கும்.

ஜங்க் மற்றும் ஃபாஸ்ட் புட் உணவுகளை உட்கொண்ட பின், அதிகளவு நீரைக் குடிக்க வேண்டும். இதனால் அந்த உணவுகளால் உடலில் சேர்ந்த டாக்ஸின்கள் வெளியேற்றப்படுவதோடு, வயிற்று உப்புச பிரச்சனையும் தடுக்கப்பட்டு, செரிமானம் சுமூகமாக நடக்கும்.

புதினா அல்லது இஞ்சி கொண்டு தயாரிக்கப்பட்ட டீ குடித்தால், செரிமான பாதைகள் சுத்தமாகி, வயிற்று பிடிப்புக்கள் ஏற்படுவது தடுக்கப்படும்.

இவற்றில் நார்ச்சத்துக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் ஏராளமான அளவில் நிறைந்துள்ளதால், இதை ஒரு பௌல் உட்கொள்வதன் மூலம், ஒட்டுமொத்த உடலும் சுத்தமாவதோடு, செரிமான மண்டலத்தின் இயக்கம் சீராக இருக்கும்.

நீர்ச்சத்து அதிகம் நிறைந்த தர்பூசணி, முலாம் பழம், வெள்ளரிக்காய் போன்றவற்றை ஒரு பௌல் சாப்பிடுவதன் மூலம், அதில் உள்ள நீர்ச்சத்து டாக்ஸின்களை வெளியேற்றி, உடலுக்கு வேண்டிய அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்களை கிடைக்கச் செய்து, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.

வாழைப்பழத்தில் உள்ள கனிமச்சத்துக்கள், அளவுக்கு அதிகமாக சாப்பிட்டதால் ஏற்படும் பக்க விளைவுகளைத் தடுக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஒரு நாளைக்கு 40 சிகரெட் ஊதித்தள்ளிய 2 வயது சிறுவன்: இன்று என்ன செய்கிறான் தெரியுமா?..!! (அதிர்ச்சிப் படங்கள்)
Next post செல்வி திவ்யதர்ஷினி ஏன்? கேள்விக்கு டிடி அதிரடி பதில்..!! (வீடியோ)