பழங்குடி இனத்தலைவர் பக்தி உடலை ராணுவமே அடக்கம் செய்தது உறவினர்கள் புறக்கணிப்பு
பாகிஸ்தானில் பழங்குடி இனத்தலைவர் பக்தி கொல்லப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் வேலைநிறுத்தம் நடந்தது. இஸ்லாமாபாத்,லாகூர் ஆகிய நகரங்களில் கடைகள் மூடப்பட்டன. பஸ்கள் ஓடவில்லை. பலுசிஸ்தான் மாநிலத்துக்கு சுயாட்சிவழங்கக்கோரி அந்தமாநிலத்தை சேர்ந்த பழங்குடிஇன மக்கள் ஆயுதம் ஏந்தி போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களை ராணுவம் கடுமையாக ஒடுக்கி வருகிறது. ராணுவ நடவடிக்கையில் பழங்குடி இனத்தலைவர் பக்தி அக்பர் கான் பலியானார். அவரது உடல் மீட்கப்பட்டது. 5 நாட்களாக மண்ணுக்குள் கிடந்ததால் அழுகியநிலையில் அது மீட்கப்பட்டது.
அந்த உடல் சவப்பெட்டியில் அடைக்கப்பட்டு சொந்த ஊரான டெரா பக்திக்கு ஹெலிகாப்டர் மூலம் கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது உடலை யாரும் பார்ப்பதற்கு ராணுவம் அனுமதிக்கவில்லை.
உறவினர்கள் புறக்கணிப்பு
அவரது குடும்பத்தினரை இறுதிச்சடங்குகளில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது. ஆயினும் யாரும் வரவில்லை. இஸ்லாமிய மதகுரு ஒருவர் அழைத்து வரப்பட்டு அவர் சடங்குகளை செய்ய அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் உறவினர்கள், பழங்குடி இன மக்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. அதிகாரிகளும், ராணுவத்தினரும், குவெட்டாவில் இருந்து அழைத்துச்செல்லப்பட்ட பத்திரிகையாளர்களும் கலந்து கொண்டனர்.
ஒப்படைக்க மறுப்பு
பக்தியின் உடலை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பக்தியின் மகனும் குடும்பத்தினரும் கேட்டுக்கொண்டனர். ஆனால் அரசாங்கம் அதற்கு மறுத்து விட்டது. ஒருவரின் உடலை அவரது குடும்பத்தினரின் விருப்பத்துக்கு எதிராக அடக்கம் செய்வது இஸ்லாத்துக்கு எதிரானது. அவரது குடும்பத்தினர் தான் அவரை எங்கே அடக்கம் செய்யவேண்டும் என்பதை முடிவு செய்யவேண்டும் என்றும் பக்தியின் மருமகன் ஆகா ஷாகித் பக்தி கூறினார்.
பக்தியின் 2 மகன்கள் தலால், ஜமீல் ஆகியோர் உயிருடன் இருக்கும்போது அவர்களிடம் ஒப்படைக்காமல் அவரது எதிரிகளிடம் ஏன் ஒப்படைக்கவேண்டும் என்றும் அவர் கேட்டார்.
டெரா பக்தியில் அரசாங்கம் அடக்கம் செய்த உடல் என் தந்தையுடையதாக இருக்காது என்று பக்தியின் மகன் ஜமில் கூறினார்.
வேலை நிறுத்தம்
இதற்கிடையில் நேற்று பக்தி கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடுமுழுவதுமாக வேலைநிறுத்தம் நடத்தப்பட்டது. அனைத்து கட்சி மாநாடு சார்பில் இந்த வேலைநிறுத்தம் நடந்தது. தலைநகர் இஸ்லாமாபாத் மற்றும் லாகூர் உள்பட அனைத்து நகரங்களிலும் உள்ள கடைகள் மூடிக்கிடந்தன. பஸ் முதலிய வாகனங்கள் ஓடவில்லை.
நேற்றைய வெள்ளிக்கிழமையை கறுப்புதினமாக அனுசரிக்கும்படி எதிர்க்கட்சிகள் மக்களை கேட்டுக்கொண்டன. பலுசிஸ்தான் மாநிலத்தின் தலைநகரம் குவெட்டா ஸ்தம்பித்துப்போய் இருந்தது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...