சீறி பறந்த கார்..சிதறிய உயிர்கள்: சிசிடிவி கமெராவில் சிக்கிய அதிர்ச்சி காட்சி..!! (வீடியோ)

Read Time:2 Minute, 10 Second

625.117.560.350.160.300.053.800.210.160.90புனேயில் சாலையை கடப்பதற்கு தடுப்பின் நடுவில் நின்று கொண்டிருந்த மக்கள் மீது கண்மூடித்தனமாக கார் மோதியதால், தாய் மற்றும் மூன்று வயது மகள் பரிதாபமாக இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புனேயின் பானேர் பகுதியில் கடந்த திங்கள் கிழமை ஐந்து பேர் கொண்ட சிறிய குழுவானது போக்கு வரத்து மிகுந்த சாலை ஒன்றில் சாலையை கடக்க முயற்சித்துள்ளனர்.

அவர்கள் ஒரு முனையில் இருந்து சாலையின் மத்தியில் உள்ள தடுப்பிற்கு வந்து அடுத்த முனைக்கு செல்வதற்காக நின்று கொண்டிருந்தனர்.

தொடர்ந்து வாகனங்கள் சென்று கொண்டிருந்தனர். இதனால் அவர்கள் போக்குவரத்து குறைவதற்காக காத்துக்கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென்று வேகமாக வந்த கார் ஒன்று நின்று கொண்டிருந்த அவர்கள் மீது பயங்கரமாக மோதியது.

இதனால் அவர்கள் 30 அடி தூரத்திற்கு வீசி எறியப்பட்டனர். இந்த பயங்கர விபத்தால், இஷா என்ற மூன்று வயது பெண் குழந்தையும், அவரது தாயார் பூஜாவும் இறந்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்த மற்ற மூவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிசிடிவி கேமராவில் பதிவான வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

மேலும் இந்த விபத்தை ஏற்படுத்தியவர் சுஜாதா ஷெராப் என்ற பெண். இவர் வாகனம் ஓட்டி வந்த போது தெரியாமல் கண்ணயந்து விட்டதாக கூறியுள்ளார்.

பொலிசார் அவரை கைது செய்து, இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வாய் தாடையில் உள்ள கருமையைப் போக்க டிப்ஸ்..!!
Next post கொதிக்கும் எண்ணெய்யினை என்மேல் ஊற்றினார்கள்! நெகிழ வைக்கும் திருநங்கையின் கதை..!!