வெயிலின் தாக்கத்தால் வாடிய சருமத்தை மீண்டும் ஜொலிக்கச் செய்ய இதோ சூப்பர் குறிப்புகள்..!!
சில வகை பூக்களை கொண்டு நமது சருமத்திற்கான சிகிச்சையை நாமே மேற்கொள்ள முடியும். வெயிலின் தாக்கத்தால் வாடிய சருமத்தை மீண்டும் ஜொலிக்கச் செய்ய பூக்களைக் கொண்டு சில பேஸ் பேக் செய்தால் போதுமானது. இங்கே சில பூக்களைக் கொண்டு வீட்டிலேயே பேஸ் பேக் எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. வாருங்கள் அதை பற்றி இப்போது பார்ப்போம்…
ரோஜா இதழ்கள் மற்றும் கோதுமை ரோஜா இதழ்கள் சிலவற்றை சூரிய ஒளியில் உலர செய்து பொடியாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.
2 ஸ்பூன் ரோஜா இதழ் பொடியுடன் 2 ஸ்பூன் கோதுமை மாவு மற்றும் சிறிது தயிர் சேர்த்து ஒர பேஸ்ட் போல கலந்துக் கொள்ள வேண்டும்.
இதனை முகத்தில் போட்டு சிறிது நேரம் வைத்திருக்க வேண்டும். பின்னர் குளிர்ந்த நீரினால் கழுவி விட வேண்டும்.
ரோஜா பூவானது சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைக்க உதவுகிறது. கோதுமையானது சருமத்தின் நிறத்தை மேம்படுத்துவதற்கு உதவுகிறது.
செம்பருத்தி மற்றும் தயிர் சரும பாதுகாப்பில் செம்பருத்தி முக்கியப் பங்கு வகிக்கிறது. இது சரும சுருக்கங்களை நீக்கி இளமை தோற்றத்தை தருகிறது.
சில செம்பருத்திப் பூக்களை வெயிலில் காய வைத்து பொடி செய்த வைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
3 ஸ்பூன் செம்பருத்தி பொடியுடன் 4 ஸ்பூன் தயிர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். அத்துடன் ஒரு ஸ்பூன் சந்தன பவுடர் சேர்க்க வேண்டும். இந்தக் கலவையை தினமும் போட்டு வந்தால் முகமானது பொழிவுடனும் மிருதுவாகவும் இருக்கும்.
தாமரை மற்றும் பாதாம் தாமரையானது வறண்ட சருமத்திற்கு மிகவும் நல்லது. தாமரை நமது சருமத்தில் ஈரப்பதத்தை நீண்ட நேரம் தக்க வைக்க உதவும். மேலும் இது சருமத்தத்துளைகளை இறுக்க செய்வதோடு சருமத்திற்கு நல்ல நிறத்தையும் தரக்கூடும்.
5 முதல் 6 தாமரை இதழ்களை சிறிது பால் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். அத்துடன் சிறிது பாதாம் பவுடரை சேர்த்து முகத்தில் போட வேண்டும்.
சிறிது நேரம் கழித்து அதனை கழுவி விட வேண்டும். மல்லிகை பூ மற்றும் பால் மல்லிகைப் பூ மற்றும் பாலை சருமத்திற்கு பயன்படுத்துவதால் சருமத்தில் இருக்கும் பருக்களை விரைவில் ஆற்றக்கூடியது மற்றும் பருக்கள் வராமல் தடுக்கவும் உதவும்.
மேலும் வயதாவதினால் ஏற்படக்கூடிய முகச்சுருக்கங்களை சரி செய்யும். முகத்தில் இருக்கக்கூடிய இறந்த சரும செல்களை அகற்றக் கூடியது. கை நிறைய மல்லிகைப் பூக்களை பொடியாக அரைத்துக் கொள்ளுங்கள்.
அத்துடன் 2 ஸ்பூன் பால், 2 ஸ்பூன் முல்தானி மெட்டி மற்றும் 2 ஸ்பூன் ஓட்ஸ் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்துக் கொள்ளுங்கள். இதனை முகத்தில் தடவி சிறிது நேரம் வைத்திருக்க வேண்டும்.
பின்னர் குளிர்ந்த நீரினால் கழுவி விட வேண்டும். ரோஜா மற்றும் பால் மிருதுவான சருமத்திற்கு ரோஜா மற்றும் பால் கலந்த கலவை நல்ல பலன் அளிக்கும். அழுக்கு நிறைந்த முகத்துளைகளை சுத்தம் செய்ய இது நன்கு உதவும்.
சிறிது ரோஜா இதழ்களை பாலில் 40 நிமிடம் ஊற வைக்க வேண்டும். அது மென்மையாக ஆனதும் நன்கு அரைத்து முகத்திற்கு போட வேண்டும்.
சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரினால் கழுவி விட வேண்டும். சாமந்தி பூ மற்றும் ரோஜா பூ சாமந்தி பூ மற்றும் ரோஜா பூ இதழ்கள் இரண்டையும் சரி பாதியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
இரணடையும் ஒன்றாக சேர்த்து நன்கு அரைத்து கொள்ளுங்கள். அரைத்த பேஸ்ட் உடன் 2 ஸ்பூன் தயிர் சேர்த்து கலந்துக் கொள்ளுங்கள். இந்தக் கலவையை முகத்தில் தடவி சிறிது நேரம் ஊற விடுங்கள்.
பின்னர் குளிர்ந்த நீரினால் கழுவி விடுங்கள். இது சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைத்து ஜொலிக்க செய்யும்.
Average Rating