நலம் தரும் கூழாங்கல் நடைபயிற்சி..!!

Read Time:2 Minute, 44 Second

201704131129308791_Pebble-path-walking-exercises_SECVPFசாதாரண நடைபயிற்சியைக் காட்டிலும், அதிக நன்மைகளை அள்ளித் தருகிறது இந்த (Pebble path) கூழாங்கல் நடைபாதை. கூழாங்கற்களின் மேல் நடப்பதால், என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.. “நம் உடலில் நரம்புகள் முடிவடைவது உள்ளங்கைகளிலும் உள்ளங்கால்களிலும்தான்.

அதன் காரணமாகவே கை தட்டுவதைக்கூட அழுத்தமாகத் தட்ட வேண்டும் என்று சொல்வோம். செருப்பு இல்லாமல் வெறும் காலில் நடக்கும்போது, கால்களில் இருக்கும் புள்ளிகள் தூண்டப்பட்டு உடலுக்கும் மனதுக்கும் நன்மை கிடக்கிறது. கூழாங்கல் உருண்டையாக, வழவழப்பாக இருப்பதால் உள்ளங்கையிலும், உள்ளங்காலிலும் பட்டதும், ஒரு இடத்தில்கூட நிற்காமல், அனைத்துப் பகுதிகளையும் தொட்டுக்கொண்டு உருண்டோடிவிடும்.

இதனால் கைகளுக்கும் கால்களுக்கும் அழுத்தம் சமமாகக் கிடைக்கிறது. வழுவழுப்பாக இருப்பதால் பாதத்தைப் பாதிக்காது. கூழாங்கல்லில் நடப்பது உடலுக்குப் பயிற்சி மட்டும் அல்ல, ஆரோக்கியத்தையும் தருகிறது. காலில் உள்ள நரம்புப் புள்ளிகள் மூலம் சிறுநீரகம், நுரையீரல், கல்லீரல், முதுகெலும்பு, கண், காது உள்ளிட்ட அனைத்து உறுப்புகளும் தூண்டப்படுகின்றன.

இதனால் அந்த உறுப்பின் செயல்பாடும் சீராகி உடல் ஆரோக்கியம் பெறும். கூழாங்கல் மூலம் பெறப்படும் அழுத்தத்தைப் போன்றதுதான், கைகளால் உள்ளங்காலுக்கு அழுத்தம் தரப்படும், ஃ புட் ரெப்லக்சாலஜி. (Foot Reflexology) கூழாங்கல் பாதையில் நடக்கும்போது, செருப்பு இல்லாமல் வெறும் காலோடு நடக்க வேண்டும்.

முதன்முதலில் நடக்கும்போது சற்று கடினமானதாக இருந்தாலும், பின்னர் பழகிவிடும். முதலில் மெதுவாக நடக்க வேண்டும். ஒரு வாரத்தில் கொஞ்சம் கொஞ்சமாக வேகத்தை அதிகரிக்க வேண்டும். கூழாங்கல் பாதையில் ஒரு நாளைக்கு 15 முதல் 20 நிமிடங்கள் வரை நடந்தால் போதும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எகிப்தின் பழங்கால கல்லறையில் 8 மம்மிகள் கண்டுபிடிப்பு..!!
Next post எத்தனை கோடி கொடுத்தாலும் அவருடன் மாத்திரம் நடிக்கமாட்டாரம் நயன்தாரா..!!