கோடை வெயிலில் சருமத்தை பாதுகாக்கும் ஆலிவ் எண்ணெய்..!!

Read Time:3 Minute, 31 Second

201704171017329537_Olive-oil-may-protect-the-skin-from-the-summer-sun_SECVPFகோடை வெயிலில் சருமம் வறண்டு பொலி விழந்து காட்சியளிக்கும். சருமத்தை பாதுகாக்கவும், பராமரிக்கவும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். ஆலிவ் எண்ணெயை பயன்படுத்தி சரும பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம். அதனை தேய்த்து குளிப்பதால் சருமம் வழவழப்பாகவும், எண்ணெய்ப் பசையுடனும் பொலிவாக காட்சி அளிக்கும். ஆலிவ் எண்ணெய்களில் பல ரகங்கள் இருக்கிறது. சரும பாதுகாப்பிற்கு ‘எக்ஸ்ட்ரா விர்ஜின் ஆயில்’ தான் சிறந்தது. ஏனென்றால் அது ரசாயன கலப்படம் இல்லாதது. சருமத்திற்கும் நல்லது.

* கோடைக்காலத்தில் உடலில் உள்ள பழைய செல்கள் உதிர்வது வழக்கத்தைவிட அதிகரிக்கும். ஆலிவ் ஆயிலை முகத்தில் தேய்த்து வந்தால் இறந்த செல்கள் உதிர்ந்து முகம் பளபளப்பாகும். புதிய செல்களுக்கு புத்துணர்வும் கிடைக்கும்.

* ஆலிவ் ஆயில் சருமத்தில் உள்ள எண்ணெய் பசையை வறண்டு விடாமல் பாதுகாக்கும் தன்மை உடையது. முகம் மட்டுமின்றி உடலிலும் தடவி வரலாம். அது சரும ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.

* ஆலிவ் எண்ணெயை கண்களை சுற்றியுள்ள கரு வளையங்கள், சுருக்கங்களை போக்குவதற்கு பயன்படுத்தலாம். சிறிய பஞ்சில் ஆலிவ் ஆயில் சில துளிகள் எடுத்து கண்களை சுற்றி தேய்த்து வரலாம். அது கண்களுக்கு புத்துணர்வை கொடுக்கும். அதேபோல் கண்களுக்கு போடும் மேக்கப்பை அகற்றுவதற்கும் இதனை உபயோகிக்கலாம்.

* உடல் முழுவதும் ஆலிவ் ஆயிலை தேய்த்து சிறிது நேரம் கழித்து குளிக்க வேண்டும். தண்ணீரில் சில துளிகள் ஆலிவ் ஆயிலை கலந்தும் குளித்து வரலாம். அவ்வாறு செய்து வந்தால் சருமம் மென்மையாகவும், புதுப்பொலிவுடனும் காட்சியளிக்கும்.

* விரல் நகங்களும், அதனை சுற்றியுள்ள சதைப்பகுதியும் வறண்டு காட்சி அளித்தால் ஆலிவ் ஆயிலை சில துளிகள் தேய்த்து வரலாம். நகங்கள் பளபளக்க தொடங்கும்.

* ஆலிவ் ஆயிலை கால்கள், மூட்டு பகுதிகளில் தேய்த்து வந்தால் எலும்புகள் வலுவாகும்.

* இதனை கூந்தலுக்கு பயன்படுத்தி வந்தால் பொடுகு தொல்லை நீங்கும். கூந்தலும் அடர்த்தியாக காட்சியளிக்கும். ஆலிவ் ஆயிலை பயன்படுத்தும்முன்பு கூந்தலை நன்றாக ஷாம்பு போட்டு தண்ணீரில் அலச வேண்டும். பின்னர் ஆலிவ் ஆயிலை தண்ணீரில் கலந்து கூந்தலின் மயிர்க்கால் களில் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். ஐந்து நிமிடங்கள் கழித்து மீண்டும் ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post படுக்கை அறையில் பாடம் நடத்த வேண்டாமே..!!
Next post மும்பை கோர்ட்டில் நடிகர் சஞ்சய்தத் ஆஜர் – பிடிவாரண்டு ரத்து..!!