அழகான தோற்றம் வேண்டுமா?..!!

Read Time:7 Minute, 12 Second

alagu11நன்கு படித்து நல்ல வேலையிலிருந்தும் சில பெண்களுக்குத் திருமணம் தடைபட்டுக் கொண்டேயிருக்கிறது. இதற்கு பெண்மைக்கென உள்ள சிறப்பம்சமான அழகில் குறைபாடு உள்ளதே சில நேரங்களில் காரணம். பருக்கள், முகத்தில் சுருக்கம், மரு, தேவையற்ற சதை உருவாகியிருத்தல் போன்றவைகளால் பெண்ணின் அழகு மங்குகிறது.

ஸ்கின் பாலிஷிங்:-
ஸ்கின் பாலிஷிங் (மைக்ரோடெர்மா ஆபரேஷன்): இம்முறைப்படி கண்ணுக்குத் தெரியாத சில பருக்கள், முகத்தில் இருக்கும் செயலற்ற செல்கள் நீக்கப்படுகின்றன.

சுருக்கம் நீக்குதல்:-
கழுத்து, தொண்டை, நெற்றி, முகத்தில் உள்ள சுருக்கத்தைச் சரி செய்ய மைக்ரோ கரண்ட் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. கிளைகாலிக் பீல்ஸ் என்ற திரவப் பொருள் முகத்தில் பூசப்படுகிறது. பின்னர் இந்த சிகிச்சைக்காக போட்டோ ஃபேசிட் சேவையைப் பயன்படுத்தி லேசர் தொழில்நுட்பம் மூலம் சிகிச்சை அளிக்கும்போது கொலஜன் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்த கொலஜனானது இழுப்புத் தன்மையை அதிகரிக்கிறது. இந்த இழுப்புத் தன்மை தசையில் ஊடுருவி கழுத்து உள்பட எந்த இடத்தில் சிகிச்சை அளிக்கிறோமோ அந்த இடத்திலுள்ள சுருக்கத்தை நீக்கி அழகுபடுத்துகிறது.

முடிகள் அகற்றுதல்:-
முகத்தில் அழகுக்கு இடையூறாக உள்ள தேவையற்ற முடிகள் அல்லது தேவையற்ற தசைகளை நீக்குவதற்கு என்டி-யாக் (நியோடிமியம் யிட்ரியம் அலுமினியம் கார்னெட்) என்ற லேசர் முறை பயன்படுத்தப்படுகிறது. இந்த முறை மூலம் தேவையற்ற முடிகள் அகற்றப்படுகின்றன.

நிரந்தரமாக முடிகளை அகற்றும் முறை:-
சில பெண்களுக்கு ஆண்களைப் போலவே மீசை இருக்கும். இத்தகைய பெண்கள் கிளினிக்கில் லேசர் சிகிச்சை மூலம் முடிகளை அகற்றிக்கொள்கின்றனர். லேசர் ஒளிக்கற்றையானது முடி வேரினை அழிக்கிறது. இதனால் சிகிச்சை அளிக்கப்பட்ட இடத்தில் முடிகள் மீண்டும் வளர்வதில்லை. ஒரே முறையில் இதற்கான முழு சிகிச்சையும் அளிக்கப்படுவதில்லை. குறைந்தது 6-லிருந்து 8 முறை வரை இந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது.

:மருக்கள் நீக்குதல்-

முகத்திலோ அல்லது கழுத்திலோ இருக்கும் மருக்களை நீக்க ரேடியோ ஃப்ரீகுயன்சி முறை பயன்படுத்தப்படுகிறது. இந்த முறையின்படி மருக்கள் நீக்கப்படுகின்றன. மேலும் வைரஸ் தொற்றுவியாதியால் விரல் அல்லது முகத்தில் ஏற்பட்ட பாதிப்பையும் இந்த சிகிச்சை மூலம் அகற்றலாம்.

முகத்தில் வெட்டு அல்லது பள்ளம் ஏற்பட்டுள்ளதை சரி செய்தல்:-
விபத்தின் காரணமாகவோ அல்லது சிலருக்கு இயற்கையாகவோ முகத்தில் பள்ளமாகவும் வெட்டுப்பகுதியாகவும் காணப்படும். இதனால் முகம் பார்ப்பதற்கு அழகாக இருக்காது. இதனைப் போக்க “போடாக்ஸ்” மற்றும் “ஃபில்லர்” என இரு வகையான சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.

இயற்கையான பாக்டீரியத்திலிருந்து கிடைக்கும் புரோட்டீனை எடுத்து அதனை ஊசி மூலம் செலுத்தும் முறைக்கு “போடாக்ஸ்” சிகிச்சை என்று அழைக்கப்படுகிறது.

உடலில் இயற்கையிலேயே புரோட்டீன் சத்து உள்ளது. இது குறைவதால் உடலில் இத்தகைய சில மாற்றங்கள் ஏற்படுகின்றன.

மற்றொரு முறையானது ஃபில்லர் முறையில் தாற்காலிக சிகிச்சை, நிரந்தர சிகிச்சை என இரு முறைகள் உள்ளன.
ஒரு சிலருடைய முகத்தில் பள்ளம் அல்லது வெட்டு போன்றவை இருக்கும். அவர்கள் தனது திருமணம் வரை முகம் பார்ப்பதற்கு அழகாக இருக்கவேண்டும். பள்ளம் சரி செய்யப்படவேண்டும் என்பர். இத்தகையவர்களுக்கு ரெஸ்டிலின் என்ற மருந்து அளிக்கப்படுகிறது.

ஒருசிலர் இந்தப் பள்ளம், வெட்டு போன்றவை நிரந்தரமாக மறைந்து முகம் அழகுடன் காட்சிதரவேண்டும் என்று விரும்புவர். இவர்களுக்கு நிரந்தர ஃபில்லர் முறை மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்த முறை மூலம் அக்குவாமிட் மருந்து ஊசி மூலம் செலுத்தப்படுகிறது. பாதிக்கப்பட்ட இடத்தில் இந்த மருந்து செலுத்தும்போது பள்ளம், வெட்டு மறைந்து முகம் அழகுடன் காட்சியளிக்கிறது. இந்தப் பிரச்சினை வயதானவர்களுக்கு மட்டும் வரும் என்று கூற முடியாது, இளமையானவர்களுக்கும் வரும்.
கருப்பு வளையத்தை அகற்றுதல்:

கண்ணைச் சுற்றி அல்லது கண்ணுக்குக் கீழே கருப்பாக வளையங்கள் வடிவில் சிலருக்கு காணப்படும். இதனைப் போக்கவும் இங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இத்தகைய குறைகள் வாழும் சூழல், கம்ப்யூட்டரை அதிக நேரம் பார்த்துக்கொண்டிருப்பது, உணவு வகை போன்றவற்றால் மற்றும் வருவதில்லை. மரபியல் குறைபாடுகளாலும் வருகிறது.

எண்ணெய்த் தன்மை அதிகம் கொண்ட சருமம் உள்ளவர்களுக்கு பருக்கள் அதிகம் வருகிறது.
ஸ்கின் பாலிஷிங் முறையில் முதலில் கையில் பரிசோதனை செய்வர். இதில் ஏதேனும் எரிச்சலோ அல்லது தோல் சிவப்பாக மாறினாலோ மேற்கொண்டு முகத்தில் சிகிச்சை அளிக்கப்படுவதில்லை. அனைத்து சிகிச்சைகளும் டாக்டரின் முன்னிலையில் நடைபெறும். மேலும் இந்த சிகிச்சையால் பக்க விளைவு ஏதும் ஏற்படாது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருமணமான ஆண், பெண் செய்யக் கூடாத 16 விஷயங்கள்..!!
Next post 40 நிமிடங்கள் நின்ற குழந்தையின் இதயம்! பின்னர் செயல்பட்ட அதிசயம்: திக் திக் சம்பவம்..!!