சிசேரியன் பிரசவம்… பின்தொடரும் பிரச்சனைகள்..!!

Read Time:4 Minute, 32 Second

201704151341298445_Cesarean-childbirth-complications_SECVPFசில சந்தர்ப்பங்களில் மருத்துவக் காரணங்களால் சிசேரியன் பிரசவமே பாதுகாப்பானது என்று மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. அதே சமயம், அவசியமே இல்லை என்றாலும், இப்போது சிசேரியன் பிரசவத்தை நாடிச்செல்வோர் அதிகரித்து வருவதும் உண்மை.

சிசேரியன் பிரசவத்தால் வரும் பிரச்னைகள் :

* சிசேரியன் பிரசவமான பெண்களுக்கு உடல்வலி, வயிற்று வலி, தலைவலி, முதுகுவலி, அதிக உதிரப்போக்கு ஏற்படலாம்.

* தாயிடம் இருந்து சிசுவுக்கு உணவு மற்றும் ஆக்சிஜனை எடுத்துச் செல்லக்கூடிய நஞ்சுக் கொடி (placenta), தாய் மற்றும் குழந்தைக்கு இணைப்புப் பாலமாக இருக்கும். அந்த நஞ்சுக்கொடி பிரசவத்துக்குப் பிறகு கர்ப்பப்பையில் இருந்து தானாகவே பிரித்துவந்துவிட வேண்டும். ஆனால், சிசேரியன் பிரசவத்தில் நஞ்சுக்கொடி கர்ப்பப்பையிலேயே ஒட்டிக்கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது. இதனால் அடுத்த பிரசவத்தின்போது, தாய்க்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு பிரசவம் சிக்கலாகலாம்.

* சிசேரியன் பிரசவம் செய்வதால், தாயின் கர்ப்பப்பையும் நீர்ப்பையும் ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொள்ளக்கூடும். இதனால் அடுத்த குழந்தையும் சிசேரியனாக இருக்கும்பட்சத்தில், அப்போது தாய்க்கு ரத்தப்போக்கு ஏற்பட்டு பிரசவம் சிக்கலாகும்.

* சிசேரியன் பிரசவத்தில் பிறந்த குறை மாத குழந்தைகளுக்குப் பிரசவ நேரத்திலும், பிறந்து சிறிது நேரம் கழித்தும் மூச்சுத்திணறல் ஏற்படுவது, பச்சிளம் குழந்தையின் வயிற்றுக்குள் ரத்த ஓட்டம் சுருங்கி அதனால் மலக்குடல் அழுகி ரத்தப்போக்கு ஏற்படுவது (Necrotising enterocolitis), தொற்றுநோய்கள் என பிறந்த முதல் மூன்று நாட்களில் பல பிரச்சனைகள் ஏற்படலாம்.

* நிறைமாதமான 37 – 40 வாரங்களுக்கு முன்பாக கர்ப்பிணிகளுக்கு சிசேரியன் ஆபரேஷன் செய்வது தாய்க்கும் சேய்க்கும் ஆபத்தை ஏற்படுத்தும்.

சுகப்பிரசவத்தில் சிரமங்களை எதிர்கொண்டு வெளிவரும் குழந்தைகள் எதிர்காலத்தில் உடல் மற்றும் மனதளவில் தைரியமானவர்களாகவும், திறமையானவர்களாகவும் இருப்பார்கள் என்கிறது ஓர் ஆய்வு முடிவு. இதற்காகவும் சிசேரியன் பிரசவங்கள் தவிர்ப்போம், சுகப்பிரசவத்துக்கு தயாராவோம்”

சிசேரியன் பிரசவம் தவிர்க்கலாம்!

* இடுப்பு எலும்புப் பகுதிக்கு பயிற்சி கொடுப்பது சுகப்பிரசவத்துக்கு வழிவகுக்கும். குழந்தையின் தலை மற்றும் உடல் வெளியேறும் வகையில் பெண்ணின் பிறப்புறுப்பு விரிந்து கொடுக்க, இடுப்பு எலும்பைச் சுற்றியுள்ள தசைகளும் உறுப்புகளும் நன்றாக ஒத்துழைக்க வேண்டும். நடைப்பயிற்சி, மருத்துவர் ஆலோசனையுடன் யோகா, கால்களை மடக்கி நீட்டுவது போன்ற எளிய உடற்பயிற்சிகள் இதற்கு கைகொடுக்கும்.

* கர்ப்பகாலத்தில் உறங்குவது, அமர்வது என ஒரே நிலையில் நிலைகொள்ளும் ஓய்வு தேவையில்லை. அன்றாட வேலைகளை, குனிந்து, நிமிர்ந்து செய்யும் வீட்டுவேலைகளைச் செய்யலாம்.

* துரித உணவு மற்றும் அதிக உப்பு, இனிப்பு, கொழுப்பு நிறைந்த உணவுகளைத் தவிர்த்து, சத்தான உணவுகளை உட்கொண்டு மனதையும் உடலையும் ஆரோக்கியமாகவும் வலிமையாகவும் வைத்துக்கொள்ள வேண்டும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சம்மர் செக்ஸ் ரொம்ப பெஸ்ட்…!!
Next post நிர்வாணமாக்கப்பட்டு மாணவன் அடித்துக் கொலை: அதிர்ச்சி வீடியோ..!!