கர்ப்பிணி பெண்ணிடம் இரக்கமில்லாமல் நடந்து கொண்ட நபர்: அதிர்ச்சி சம்பவம்..!!

Read Time:1 Minute, 30 Second

625.500.560.350.160.300.053.800.748.160.70 (4)ஜேர்மனியில் கர்ப்பிணி பெண் ஒருவர் இஸ்லாமிய முறைப்படி பர்தா அணிந்திருந்ததால் அவரை பேருந்தில் ஏற்ற மறுத்த ஓட்டுனரின் செயல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஜேர்மனியின் Lower Saxony மாகாணத்தை சேர்ந்த ஒரு இஸ்லாமிய பெண்மணி சாலையில் இருந்த தனியார் பேருந்தில் ஏற முயன்றுள்ளார், அந்த பெண்மணி கர்ப்பமாகவும் இருந்துள்ளார்.

இஸ்லாமிய வழக்கப்படி தன் முகத்தை பர்தாவால் மூடியிருந்த அந்த பெண்ணிடம், அவர் பர்தா அணிந்திருந்ததையே காரணம் காட்டி பேருந்தில் ஏற்ற ஓட்டுனர் மறுத்துள்ளார்.

பின்னர் இதுகுறித்து அப்பெண்ணின் கணவர் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளிக்க ஓட்டுனரிடம் விசாரணை நடத்திய அதிகாரிகள் அவருக்கு €10,000 அபராதம் விதித்தனர்.

இது போன்ற சம்பவங்கள் இனி நடக்க கூடாது எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்நிலையில், அறியாமையால் பேருந்து ஓட்டுனர் இப்படி நடந்து கொண்டு விட்டதாக தனியார் பேருந்து நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வருடம் முழுவதும் முட்டாள்கள் தினமா?..!! (கட்டுரை)
Next post நயன்தாரா இயக்குனரின் அடுத்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா..!!