முகத்தின் சுருக்கம் நீங்கி பளபளப்பாக..!!

Read Time:4 Minute, 20 Second

alagu_1splமேடம் உங்களுக்கு 40 வயசு நம்பவே முடியல… டீன் பெண் மாதிரி இருக்கீங்க என்று சில பெண்களைப் பார்த்து வியந்திருப்போம். இப்படி வயதான ஒரு பெண்ணின் முகத்தை கல்லூரி மாணவி போல் காட்டுவது முகம் தான். முகத்தின் சுருக்கங்களும் பளபளப்பற்ற அதன் வறட்சியும் வயசை அதிகமாக்கி காட்டுகின்றன. முறைப்படி அழகைப் பராமரித்தால் ஐம்பது வயது வறையிலும் மிடுக்கான இளமை முகத்தை பெற்று விடலாம்.

தோல் சுருக்கம் எதனால் ஏற்படுகிறது? கொலேன், எலாஸ்டின் ஆகியவைதான் தோலில் சுருக்கம் ஏற்படாமல் பாதுகாக்கிறது. இவைதான் தோலை விரைப்பாக மாற்றுகின்றன. வயது ஏற ஏற தோலை விரைப்பாக இழுத்துப் பிடித்துள்ள எலாஸ்டின், கொலேன் ஆகியவை தங்கள் பிடிமானத்தை தளர்த்த தொடங்கி விடுகின்றன. ஒரு பெண் 40-ஐ கடந்த பிறகு படிப்படியாக எண்ணைப்பசை உற்பத்தி குறைய ஆரம்பிக்கும்.

தோல் வறண்டு விடும். நம் உடலில் புதிய செல்கள் உற்பத்தியாக’ பழைய செல்கள் இறந்து போய் விடுகிற நிகழ்ச்சி படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். அதனால் தோல், தன் மிருதுத்தன்மையை இழந்து கடினமானதாக ஆரம்பிக்கும். எலாஸ்டின் கொலேன் போன்றவை தோலை இறுக்கமாக பிடித்து வைத்திருக்க சில பேஸ்-பேக்…
வறண்ட முகத்திற்கு…

தேவை: முட்டை வெள்ளைக்கரு-1, தேன்-1 டேபிள்ஸ்பூன், சூரியகாந்தி எண்ணை-1 டீஸ்பூன்
செய்முறை: முட்டையின் வெள்ளைக்கருவை நன்கு அடித்துக்கொண்டு அதோடு தேனையும், சூரியகாந்தி எண்ணையையும் கலந்து கொள்ளுங்கள் முகத்தில் பூசி 20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவுங்கள்.
உங்களது முகம், சுருக்கங்கள் இன்றி பளபளவென்றிருக்க வீட்டிலேயே செய்யக்கூடிய அற்புதமான பேஸ் பேக் இது.

தேவை: ஆலிவ் எண்ணை அல்லது பாதாம் எண்ணை-1 டீஸ்பூன், ஒட்மீல் -2 டேபிள் ஸ்பூன், பால் அரைகப்
செய்முறை: பாலில் ஒட்மீலை கலந்து நன்றாக வேகவிடவும். வெந்ததும், ஆறவைத்து ஆலிவ் எண்ணை கலந்து முகம் மற்றும் கழுத்தில் தடவவும். 25 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவி விடவும்.
வாரத்தில் 3 அல்லது 4 நாட்கள் இதுபோல செய்தால் முகம் சுருக்கங்களின்றி அழகாக இருக்கும்.

இனி முகத்தை இளமையாக்கும் குளியல்கள் சில….. பேரழகி கிளியோ பாட்ரா தனது ஆழகைப் பராமரிப்பதற்கு மேற்கொண்ட குளியல்தான் இது. மேற்கத்திய நாடுகளில் இதை கிளியோபாட்ரா குளியல் என்றே வர்ணிக்கிறார்கள். விலங்குகளின் பால், தேங்காய்பால் மற்றும் அரோமா கலந்த இந்தக் குளியல் மூலம் சருமம் மினுமினுப்பு பெறுவதோடு புத்துணர்ச்சி அடைகிறது. உடலும் ரிலாக்ஸ் ஆகும்.

அரோமா குளியல்
பூக்கள் மற்றும் பழங்களின் சாறை கலந்து குளிப்பதால் முகம் மென்மையானதாக மாறும்
பிளவர் டஸ்ட் குளியல்
ஆரஞ்சு பவுடர், உப்பு, மற்றும் வண்ணமலர் இதழ்களைக் கலந்து குளிக்க வேண்டும். பிறகு உடம்பில் கொழுப்பு படிவதைத் தடுக்க நீராவி குளியல் எடுக்க வேண்டும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அவளது செய்கையை படுக்கையில் உடலுறவின் போது பிரதிபலியுங்கள்..!!
Next post 60 கோடி பங்களாவில் வசிக்கும் பேய்..!!