சமுதாய உணர்வை காயப்படுத்தியதாக வழக்கு: ராக்கி சாவந்த் நேரில் ஆஜராக ஐகோர்ட்டு உத்தரவு..!!

Read Time:1 Minute, 54 Second

201704131123261490_High-Court-ordered-Rakhi-Sawant--to-appear_SECVPFதனியார் டி.வி. நிகழ்ச்சி ஒன்றில், இந்தி நடிகை ராக்கி சாவந்த் ராமாயணத்தை இயற்றிய வால்மீகி முனிவர் குறித்து அவதூறாக பேசியதாக சர்ச்சை எழுந்தது. இது வால்மீகி சமுதாயத்தினரின் உணர்வுகளை காயப்படுத்துவதாக கூறி பஞ்சாப் மாநிலத்தில் உள்ள லூதியானா கோர்ட்டில் ஒருவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த வழக்கில், ராக்கி சாவந்தை ஆஜர் ஆகும் படி கோர்ட்டு பலமுறை அவருக்கு சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் ஆஜர் ஆகவில்லை. இதையடுத்து கடந்த 8-ம் தேதி லூதியானா கோர்ட்டு அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்தது.

இதையடுத்து பஞ்சாப் போலீசார் ராக்கி சாவந்தை கைது செய்ய மும்பை வந்தனர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து பஞ்சாப் போலீசார் அவரை கைது செய்ய முடியாமல் திரும்பிச்சென்றனர்.

இந்தநிலையில் லூதியானா கோர்ட்டு பிறப்பித்த பிடிவாரண்டை ரத்து செய்யக்கோரி ராக்கி சாவந்தின் வக்கீல் ஆதிப் சேக் மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, ராக்கி சாவந்த் 3 வாரத்திற்குள் லூதியானா கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டது. அதுவரை அவரை கைது செய்ய போலீசாருக்கு தடை விதித்தும் ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அச்சத்தை விதைக்கும் பிரசார உத்தி..!! (கட்டுரை)
Next post மகனை சித்ரவதை செய்த தந்தைக்கு 15 ஆண்டுகள் சிறை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!