அமெரிக்க ஓபன் டென்னிஸ்: 3-வது சுற்றுக்கு பெடரர், மோயா முன்னேற்றம்

Read Time:3 Minute, 5 Second

Tennis.jpgTennis.jpgஅமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நிïயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் 5-வது நாளான நேற்று ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலகின் முதல் நிலை வீரரும் சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்தவருமான ரோஜர் பெடரர், டிம்ஹன்மேனுடன் (இங்கிலாந்து) மோதினார்.

இந்த ஆட்டத்தில் பெடரர் 6-3, 6-4, 7-5 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று 3-வது சுற்றில் நுழைந்தார். மற்றொரு ஆட்டத்தில் கார்லோஸ் மோயா (ஸ்பெயின்), பால்ஹென்றியை எதிர்கொண்டார். இதில் மோயா 7-6,7-6,6-4 என்ற செட் கணக்கில் சற்று போராடி ஹென்றியை தோற்கடித்தார்.

பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலகின் 2-ம் நிலை வீராங்கனையான ஜஸ்டின் ஹெனின் (பெல்ஜியம்), சுகியாமாவுடன் (ஜப்பான்) மோதினார். இந்த ஆட்டத்தில் ஹெனின் 4-6,6-1,6-0 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்ற ஆட்டங்களில் சுவட்லனா குனட்ஸ்சேவா (ரஷியா) 6-3,6-0 என்ற கணக்கில் சகநாட்டு வீராங்கனை அனஸ்டசியாவையும் சகர்பீர் (இஸ்ரேல்) 6-3,6-7,7-6 என்ற கணக்கில் பிரான்செஸ்காவையும் (இத்தாலி), எலீனா டெமன்டிவா (ரஷியா), வெராசெனோராவை (ரஷியா) 7-5,6-3 என்ற செட் கணக்கில் தோற்கடித்தனர்.

ஆண்களுக்கான இரட்டையர் முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் பெயஸ், மார்ட்டின்டம் (செக்குடியரசு) ஜோடி 6-1,6-2 என்ற நேர் செட்டில் செக்குடியரசு ஜோடியான பீட்டர்பலா, ராபினை தோற்கடித்தது. கலப்பு இரட்டையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் பெயஸ் (இந்தியா) சம்ந்தானாவுடன் (ஆஸ்திரேலியா) இணைந்து ஆடினார்.

இந்த ஜோடி முதல் சுற்றில் பெல்லாரசைச் சேர்ந்த மேக்ஸ்மிரினி விக்டோரியாவிடம் 6-3,2-6,5-10 என்ற செட் கணக்கில் தோல்வி கண்டது. மற்றொரு ஆட்டத்தில் மார்ட்டினா நவரத்தினோலோவா (அமெரிக்கா) பாப்பிரயன் (அமெரிக்கா) ஜோடி தனது சகநாட்டு ஜோடியான கொரினா, மைக் பிரயனை 6-7, 6-4,10-4 என்ற செட்டில் வென்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post சாம்பூரை கைப்பற்ற ராணுவம் கடும் போர் 120 விடுதலைப்புலிகள் பலியா?
Next post ஈரான் நாட்டில் பயங்கர விபத்து விமானம் தீப்பிடித்து 80 பயணிகள் பலி