சச்சின் வாழ்க்கை வரலாற்று படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!!

Read Time:1 Minute, 33 Second

201704121522165128_Sachin-A-Billion-Dreams-movie-trailer-release-date-announced_SECVPFஇந்திய கிரிக்கெட் உலகில் மிகப்பெரிய நட்சத்திரமாக போற்றப்படுபவர் சச்சின் டெண்டுல்கர். அவருடைய வாழ்க்கை வரலாறு ‘சச்சின் ஏ பில்லியன் ட்ரீம்ஸ்’ என்ற பெயரில் திரைப்படமாக வெளிவர உள்ளது. ஏற்கெனவே, தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக வெளிவந்து பெரிய வரவேற்பை பெற்றது. அதேபோல், இந்த படமும் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தை ஜேம்ஸ் எர்ஸ்கின் இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் நாளை (ஏப்ரல் 13) இரவு 7 மணிக்கு வெளியிடப்போவதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

உலகப் புகழ்பெற்ற இந்தியர்களான சச்சின் மற்றும் ரகுமான் இணைந்துள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த எதிர்பார்ப்பை இப்படத்தின் டிரைலர் ஓரளவுக்கு திருப்திபடுத்தும் என நம்பப்படுகிறது. இப்படத்தை 200 நாட் அவுட் புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இறக்காமம்: கந்தூரி சோறு, நஞ்சான துயரம்..!! (கட்டுரை)
Next post தமிழ்ப்புத்தாண்டு.. டி.வியில் ஒளிபரப்பாக இருக்கும் படங்களின் லிஸ்ட்..!!