வெப்பத்தை ஓரளவு தணிக்கும் வழிமுறைகள்..!!

Read Time:3 Minute, 31 Second

201704110823247161_summer-heat-sweating_SECVPFகோடை வெயில், வெளியில் தலைகாட்ட முடியாமல் தடை போடுகிறது. வெளியே சுற்றாமல் வீட்டிலேயே இருந்தாலும், கோடை வெயிலின் தாக்கத்தை நன்கு உணர முடிகிறது. அதிலும் கடலோர மாவட்டங்களில் வெயில் குறைவாக இருந்தாலும், அனல் காற்றினால் வீட்டில் கூட இருக்க முடியவில்லை.

அதனால் பலரும் ஏ.சி. வாங்க நினைப்பார்கள். ஏ.சி. உடலுக்கு மிகவும் தீங்கு தருவது என்பதால், இயற்கையாகவே வீட்டை எப்படி குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்வது என்று பலரும் வழிகளை தேடிக் கொண்டிருக்கின்றனர்.

வீட்டிற்குள் காற்று வரட்டும் என்று திரைச்சீலைகளை நீக்கிவிட்டு, கோடையில் ஜன்னல் கதவுகளைத் திறந்து வைக்காதீர்கள். இதனால் வீட்டில் அனல் காற்று தான் அதிகரிக்கும். மாறாக அனல் காற்று வீட்டினுள் வராதவாறு சற்று வெளிர் நிற காட்டன் திரைச்சீலைகளைப் பயன்படுத்துங்கள். இதனால் அனல் வீட்டினுள் வராமல் இருக்கும்.

பகல் நேரத்தில் வீட்டில் தேவையில்லாமல் விளக்குகளை போடுவதைத் தவிர்க்கவும். இதனால் வீட்டினுள் வெப்ப அளவு அதிகரிக்கும். மேலும் மின்சார போர்டில் பிளக் மாட்டி ஆன் செய்து இருந்தால், அதனை அணைத்துவிட வேண்டும்.

காற்றை வெளியேற்றும் மின்விசிறியை, வீட்டின் சமையலறை மற்றும் படுக்கை அறையில் பொருத்தி, அனல் காற்றை வெளியேற்ற வேண்டும். இதனால் வீட்டினுள் சுற்றும் வெப்பக் காற்றை, அந்த மின்விசிறி வெளியேற்றி, அறையை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளலாம்.

ஒரு நாளைக்கு காலை, மாலை என இரு வேளையும் வீட்டை நன்றாக தண்ணீரால் துடைத்து விட வேண்டும்.

படுக்கை அறை குளிர்ச்சியுடன் இருக்க, இரவில் படுக்கும் போது டேபிள் மின்விசிறியின் முன் அகலமான பாத்திரம் அல்லது ஒரு வாளியில் நீரை நிரப்பி வையுங்கள். இதனால் அறையில் வெப்பம் அகன்று, நன்கு குளிர்ச்சியுடன் இருக்கும். பகலில் ஜன்னலை மூடி வைத்தும், மாலை மற்றும் இரவு நேரங்களில் ஜன்னலைத் திறந்தும் வையுங்கள். இதனால் வீட்டினுள் காற்றோட்டம் அதிகரித்து, வீடு குளிர்ச்சியுடன் இருக்கும்.

வீட்டை மட்டும் குளிர்ச்சியுடன் வைத்துக் கொண்டால் போதாது. நம் உடலையும் குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு தண்ணீர், பழச்சாறுகளை அதிகம் பருகுவதோடு, வெயிலில் சுற்றுவதை தவிர்க்க வேண்டும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிம்பு, தனுஷ் பாணியில் நடிகர் பிரபுதேவா..!!
Next post அந்த காலத்திலேயே ‘பாகுபலி’ எடுத்தவர் பாக்யராஜ்: இயக்குனர் வி.சேகர் புகழாரம்..!!