‘பவுர்ஃபுல்’ பெண்கள்: இந்திரா நூயிக்கு 4வது இடம்13வது இடத்தில் சோனியா!

Read Time:3 Minute, 23 Second

Woman.Fower.jpgஉலகின் சக்தி வாய்ந்த பெண்மணியாக ஜெர்மனி அதிபர் ஏஞ்செலா மெர்க்கல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பெப்சி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்கவுள்ள இந்தியரான இந்திரா நூயிக்கு 4வது இட¬ம், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு 13வது இட¬ம் கிடைத்துள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த போர்ப்ஸ் பத்திரிக்கை அதிக அதிகாரம் படைத்த உலகின் 100 பெண்களை வரிசைப்படுத்தி பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் உலகிலேயே அதிக சக்தி வாய்ந்த பெண்மணியாக ஜெர்மனி அதிபர் மெக்கல் அறிவிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் காண்டலீஸா ரைஸ் 2வது இடத்தில் உள்ளார். இந்தியாவில் பிறந்து அமெரிக்க குடியுரிமை பெற்று, பெப்சி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக விரைவில் பொறுப்பேற்கவுள்ள இந்திரா நூயிக்கு 4வது இடம் கிடைத்துள்ளது.

இந்தப் பட்டியலில் மொத்தம் நான்கு இந்தியர்கள் இடம் பெற்றுள்ளனர். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு 13 வது இட¬ம், ஐசிஐசிஐ வங்கியின் இணை நிர்வாக இயக்குநர்களான லலிதா குப்தே, கல்பனா மொர்பாரியாவுக்கு 93வது இடம் கிடைத்துள்ளது. துபாயைச் சேர்ந்த ஜம்போ குழு தலைவரான வித்யா சப்ரியாவுக்கு 95 வது இடம் கிடைத்துள்ளது.

முன்னாள் அமெரிக்க அதிபர் கிளிண்டனின் மனைவி ஹில்லாரிக்கு 18வது இட¬ம், பில்கேட்ஸின் மனைவி மெலிண்டாவுக்கு 12வது இட¬ம் கிடைத்துள்ளது. அமெரிக்க அதிபர் புஷ்ஷின் மனைவி லாரா 43வது இடத்தில் உள்ளார். இங்கிலாந்து அரசி எலிசபெத்துக்கு 46வது இட¬ம், மியான்மர் ஜனநாயக தலைவி ஆங் சென் சூகியிக்கு 47வது இட¬ம் கிடைத்துள்ளது.

சோனியா காந்தி குறித்து போர்ப் பத்திரிக்கை வெளியிட்டுள்ள கருத்தில், பிரதமர் மன்மோகன் சிங்கை விட சோனியா காந்திக்குத் தான் அதிக அதிகாரங்கள் உள்ளது. கிட்டத்தட்ட பிரதமரைக் கட்டுப்படுத்தும் அளவுக்கு மிகவும் சக்தி வாய்ந்த நிலையில் அவர் உள்ளார். இந்தியாவின் கிராமப்புற ஏழைகளிடையே சோனியாவுக்கு நல்ல செல்வாக்கு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் மொத்தம் 53 பேர் இடம்பெற்றுள்ளனர். ஐந்து பேர் இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள்.

Woman.Fower.jpg

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post மட்டக்களப்பில் கூலித் தொழிலாளி சுட்டுக்கொலை
Next post சாம்பூரை கைப்பற்ற ராணுவம் கடும் போர் 120 விடுதலைப்புலிகள் பலியா?