மணிரத்னத்தின் ‘காற்று வெளியிடை’ காப்பி படமா? படக்குழு விளக்கம்..!!

Read Time:2 Minute, 22 Second

201704101540147156_Maniratnam-Kaatru-Veliyidai-Copy-film-team-explain_SECVPFமணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, அதிதி ராவ் ஹைதரி உள்ளிட்டோர் நடித்த ‘காற்று வெளியிடை’ கடந்த வெள்ளிக்கிழமை வெளிவந்தது. மணிரத்னம் படங்களில் இதுவரை எந்தளவிற்கும் இல்லாத அளவுக்கு இந்த படத்திற்குதான் அதிகளவில் விமர்சனங்கள் எழுந்தன. அதேநேரத்தில், படம் குறித்து பலரும் பலவிதமான கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், இந்த படம் கொரியன் சீரியலான ‘டீசென்டன்ட்ஸ் ஆப் த சன்’ என்பதன் அப்பட்டமான காப்பி என்று சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி பரவியது. இந்த தொடரின் நாயகன் ராணுவத்தில் பணிபுரிவர். நாயகி ஒரு டாக்டர். இருவருக்கும் இருக்கும் மோதல், காதல் இதுதான் இந்த தொடரின் கதை. அந்த தொடரின் கதையும், காற்று வெளியிடை படத்திற்கும் நிறைய ஒற்றுமை இருப்பதாக கருத்துக்கள் தெரிவித்து வந்தனர்.

இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் படக்குழுவினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், இந்த படம் 1971-ல் போர் விமானியாக இருந்த திலீப் பரூல்கர் என்பவருடைய விமானம் பாகிஸ்தானால் சுடப்பட்டு வீழ்த்தப்பட்டது. அப்போது, அவர் ராவல்பிண்டி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். 1972-ல் அவர் தன்னுடன் அடைக்கப்பட்டிருந்த இரண்டு சிறை கைதிகளுடன் அங்கிருந்து தப்பிக்கிறார்.

இந்த உண்மை கதை ‘Four miles to Freedom’ என்ற பெயரில் புத்தகமாக பெய்த் ஜான்ஸ்டன் என்பவர் எழுதியிருக்கிறார். ‘காற்று வெளியிடை’ படத்தில் சில காட்சிகள் இந்த புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டு படமாக்கப்பட்டிருக்கிறது. மற்றபடி எந்த சீரியலின், படத்தின் காப்பி கிடையாது என்று தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அநியாயமாக உயிரைக் காவு கொள்ளும் டெங்கு..!! (கட்டுரை)
Next post எனக்கும் இயைராஜாவுக்கும் இடையேயான பிரச்சனையை காலம் தீர்த்து வைக்கும்: எஸ்.பி.பாலசுப்பிரமணியம்..!!