பெண்கள் உடலுறவுக்கு ஆசை படுவதற்கான காரணங்கள்..!!

Read Time:5 Minute, 1 Second

tamisex-348x250ஒரு ஆண், உடலுறவை விரும்ப ஒன்று அல்லது இரண்டு காரணங்களே இருக்க முடியும். ஆனால் பெண்களைப் பொறுத்தவரை, கிட்டத்தட்ட 200 காரணங்கள் இருக்கிறதாம். அதில் காதல், காமம் ஆகியவற்றுக்குக் கிட்டத்தட்ட கடைசி இடம்தானாம்.

போரடிப்பதால் சில பெண்கள் உடலுறவுக்கு உட்படுகிறார்களாம், தூக்கம் வராமல் தவிப்பவர்களுக்கு செக்ஸ் உறவு நல்ல மருந்தாக இருக்கிறதாம். சே, பாவமா இருக்கு ‘இதைப்’ பார்த்தா என்று ஆண்கள் மீது பாவப்பட்டு, பச்சாதாபப்பட்டு உறவுக்கு ஒத்துழைப்பவர்களும் உண்டாம். ஒரே தலைவலி ஒரு ‘டீ’ சாப்டா தேவலாம் என்று நினைத்து உறவுக்கு வருபவர்களும் உண்டாம்.

ஆக, பெண்களைப் பொறுத்தவரை உடல் ரீதியான இன்பம், காதல், காமம், ஆசை என்பதைத் தாண்டி ஏகப்பட்ட காரணங்கள் இருக்கிறது அவர்கள் உடலுறவுக்கு வருவதற்கு என்கிறார்கள் இதுகுறித்து ஆராய்ந்தவர்கள்.

ஒரு பெண் உடலுறவை விரும்புதவற்கு கிட்டத்தட்ட 200 காரணங்களை அவர்கள் வகைப்படுத்துகிறார்கள். மன அமைதி விரும்புவோர், செய்த உதவிக்கு நன்றி கூற விரும்பி என்று இதில் வித்தியாசமான காரணங்கள் இடம் பெறுகின்றன. பல்வேறு பெண்களை நேரில் சந்தித்து அவர்களின் உடலுறவு அனுபவங்களை கண்டறிந்து அதன் மூலம் இந்தக் காரணங்களை வகைப்படுத்தியுள்ளனர்.

பெரும்பாலான பெண்களுக்கு, ஆண்களைப் பார்த்தவுடன் பிடிப்பதில்லையாம். வெளியில் எவ்வளவுதான் நட்பாக பேசினாலும் கூட மனசுக்குள் அந்தப் ‘பார்ட்டி’ யை தராசுத் தட்டில்தான் உட்கார வைத்திருப்பார்களாம். மேலும் ஆண்களைப் பார்த்தவுடன் மோகம் பிறப்பது என்பது பெண்களுக்கு அவ்வளவு எளிதில் வந்து விடுவதில்லையாம். அதாவது, மன ‘ஸ்கேனரில்’ விதம் விதமாக ஆராய்ந்து, அக்கு வேறாக பிரித்துப் பார்த்த பின்னர்தான் ஒரு ஆண்மீது பெண்ணுக்கு முழுமையான காதலும், காம உணர்வும் வருகிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

ஒரு ஆணிடம் தனது உடலைத் தரும் முடிவுக்கு பெண் வரும்போது அந்த ஆணைப் பற்றிய அனைத்தையும் அவள் அறிந்து வைத்திருப்பாள் என்றாலும் கூட உடல் ரீதியான திருப்திக்காக மட்டுமே பெண்கள் ஆண்களை அணுகுவதில்லை என்பதும் இந்த ஆய்வின் ஒருபகுதி கருத்து.

உடலுறவில் ஈடுபடும் பெண்கள் சொன்ன சில காரணங்கள் – எனது செக்ஸ் திறமை சரியாக இருக்கிறதா என்பதை பரிசோதித்துக் கொள்ள அதில் ஈடுபடுகிறேன், உடலின் மினுமினுப்பு குறைந்து விட்டது அதை சரி செய்ய ஈடுபடுகிறேன், அவனிடம் சற்று கோபமாக பேசிவிட்டேன்சமாதானப்படுத்த ஈடுபடுட்டேன் என்ற ரீதியில் போகிறது. இன்னும் சிலர் சொன்ன காரணங்கள், அவன் எனக்குப் பிடித்த ஒரு விஷயத்தை செய்து கொடுத்தான், அதற்கு நன்றி கூற விரும்பினேன், அதற்காக உடலுறவுக்கு ஒத்துக் கொண்டேன் என்பது

இருப்பினும் கிட்டத்தட்ட 85 சதவீதம் பெண்கள், செக்ஸ் உறவு மன திருப்தியையும், மன அமைதியையும், உடல் ரீதியான உற்சாகத்தையும் தருவதாக ஒப்புக் கொண்டுள்ளனர். அதாவது, என்னதான் சப்பைக் காரணமாக இருந்தாலும் கடைசியில் அந்த உடலுறவு அவர்களுக்கு ஒரு வித திருப்தியைத் தருவதை ஒப்புக் கொள்கின்றனர்.

பெண்களின் மனதைப் புரிந்து கொள்வது கடினம் என்பார்கள். இந்த ஆய்வைப் பார்த்தால், எந்த விஷயத்திலும் பெண்களைப் புரிந்து கொள்வது ரொம்பக் கஷ்டம் போலத்தான் தெரிகிறது.
பொம்பங்களைப் புரிஞ்சுக்கிறது ரொம்பக் கஷ்டம்ய்யா … என்று ‘பாப்பையா’ ஸ்டைலில் சொல்லி மனசைத் தேத்திக்கிட வேண்டியதுதான்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கரு கரு’ கூந்தலுக்கு காய்கறி வைத்தியம்..!!
Next post 14000 ஆண்டுகளுக்கு முந்தைய கிராமம் கனடாவில் கண்டுபிடிப்பு: ஆராய்ச்சியாளர்கள் சாதனை..!! (வீடியோ)