எனக்கும் தன்மானம் உண்டு: இளையராஜா குறித்து முதல் முறையாக மனம் திறந்த பாலசுப்பிரமணியம்..!!

Read Time:2 Minute, 35 Second

625.117.560.350.160.300.053.800.210.160.90இளையராஜா நோட்டீஸ் அனுப்பியது எனக்கு வலித்தது என முதல் முறையாக பாடகர் பாலசுப்பிரமணியம் அவர்கள் கூறியுள்ளார்.

முறையான அனுமதியின்றி எஸ்பி பாலசுப்பிரமணியம் தனது பாடல்களை பாடக்கூடாது என இசைஞானி இளையராஜா சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, இளையராஜாவின் பாடல்களை மேடைக்கச்சேரியில் பாடமாட்டேன் என பாலசுப்பிரமணியத் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், அமெரிக்காவில் நடைபெறும் கச்சேரி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்து வரும் பாலசுப்பிரமணியும், இளையராஜா விவகாரம் குறித்து தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.

அதில், இளையராஜாவும் நானும் சினிமாவுக்கு வருவதற்கு முன்பே நண்பர்கள் என்றும், தங்களுக்கு இடையே உள்ள சிக்கலை காலம் தீர்க்கும்.

மேலும், காப்புரிமை விவகாரம் குறித்து தனக்கு தெரியாது, இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் அனுப்பியது எனக்கு வலித்தது.

இளையராஜாவுக்கு காப்புரிமை பெற உரிமையுண்டு. நீங்களே இதனை அவருடன் பேசி சமாளித்துக்கொள்ளலாமே என்று நிறையபேர் என்னிடம் வந்து சொன்னார்கள்,

ஆனால், எனக்கு தன்மானம் என்ற ஒன்று உண்டு. அவருடன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பாடியுள்ளேன். அப்படியிருக்கையில் இப்படி ஒரு காப்புரிமை விவகாரம் குறித்து இளையராஜா தெரிவிக்கவில்லை.

ஆனால், எனக்கு தெரியாமல் நடந்த ஒன்று இது. எனது நண்பராக இருக்கும் அவர், ஒரு போன் செய்து கூட இந்த தகவலை தெரிவித்திருக்கலாம். இதுதான் எனக்கு மிகவும் மனம் வலித்தது என கூறியுள்ளார்.

மேலும், இளையராஜாவுடன் பணியாற்றியது எனக்கு கிடைத்த பெருமை. இந்த பிரச்சனைக்கு எல்லாம் காலம் தான் பதில் சொல்லும் என கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அழகு குறிப்புகள்: இளமை ரகசியம்..!!
Next post ஆணுறுப்பு எழுச்சிக் குறைபாட்டைக் குணப்படுத்தும் வீரியமிக்க 9 வழிமுறைகள்..!!