வெங்கட் பிரபுவின் அடுத்த பட ஹீரோ யார்? புதிய தகவல்..!!

Read Time:1 Minute, 32 Second

201704091549111474_Who-is-Venkatprabhu-next-movie-hero_SECVPFவெங்கட் பிரபு இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த ‘சென்னை 600028’ இரண்டாம் பாகம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியது. விமர்சன ரீதியாகவும், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கும் அடுத்த படத்தை ‘அம்மா’ கிரியேசன்ஸ் சிவா தயாரிக்கப்போவதாக அறிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து அந்த படத்திற்காக பூஜையும் போடப்பட்டது. ஆனால், அப்படத்தில் யார்? யார் நடிக்கப் போகிறார்கள் என்பது குறித்து எதுவும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில், வெங்கட்பிரபு இயக்கும் அடுத்த படத்தில் கயல் சந்திரன், நிவேதா பெத்துராஜ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது முழுக்க முழுக்க நகைச்சுவை படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. தற்போது இப்படத்திற்கான ஆரம்ப கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில், இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சின்ன வெங்காயத்தின் சிறப்புகள் உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்..!!
Next post அழகு குறிப்புகள்: இளமை ரகசியம்..!!