கோடை காலத்தில் சூட்டை கிளப்பும் உணவு வகைகள்..!!

Read Time:3 Minute, 51 Second

201704060829528083_summer-heat-for-daring-foods_SECVPFஜில்லென்ற குளிர்பானங்களை கோடைகாலத்தில் குடிக்கக் கூடாது. அறை தட்பவெப்ப அளவை விடக் கொஞ்சம் மாறுபாட்டோடு இருக்கிற தண்ணீர், குறிப்பாக பானைத் தண்ணீர் அல்லது வெதுவெதுப்பான நீரை அருந்தவும். இரண்டுமே தாகத்தைத் தணிக்கும். குளிர்பதனப் பெட்டியில் உள்ள ‘ஜில்‘ தண்ணீர் ஒரு சில வினாடிகளுக்கு மட்டுமே திருப்தி தரும். அது உண்மையிலேயே தாகத்தை தணிக்காது.

தர்பூசணி, அன்னாசி, கொய்யா, சாத்துக்குடி, ஆரஞ்சு, திராட்சை ஆகிய பழங்களை சாப்பிடுவது புத்துணர்ச்சியைத் தரும். வெள்ளரிக்காய், கேரட், தக்காளி, முட்டைகோஸ் போன்றவை அடங்கிய சாலட் சாப்பிடுவது ஆரோக்கியத்துக்கு ஏற்றது. உப்பு கலந்த எலுமிச்சை ஜூஸ், நீர்மோர், இளநீர் வெப்பத்தைத் தணிக்கும் குளிர்பானங்கள்.

மோர் கலந்த பழைய அமுதை (பழைய சாதம்) சிறிது ஊறுகாய் மற்றும் வெங்காயத்துடன் சாப்பிடலாம். உடலுக்கு குளிர்ச்சியையும் இயற்கை சத்தையும் கொடுக்கும். ஆரஞ்ச், தர்பூசணி, பப்பாளி, அன்னாசி, எலுமிச்சை ஆகிய பழங்களின் அறுசுவை பானம் உடல் நலத்துக்கு நல்லது.

கோடை காலத்தில் சூட்டைக் கிளப்பும், சாப்பிடக் கூடாது என சொல்லப்படும் உணவு வகைகள் பற்றிய உண்மைகள்;-

பப்பாளி சூட்டைக் கிளப்பும் பழம் என்பதால் அதை இளம் பெண்களும் கருவுற்றிருக்கும் தாய்மார்களும் உண்ணக் கூடாது என்பார்கள். ஆனால் உண்மை என்னவென்றால், பப்பாளியில் வைட்டமின் ஏ சத்து உள்ளிட்ட ஏராளமான ஊட்டச் சத்துகள் இருக்கின்றன. பப்பாளி எந்த விதத்திலும் கருவை பாதிக்காது.

மாம்பழம் உடல் சூட்டைக் கிளப்பும் என்பதால் சாப்பிடக் கூடாது என்பார்கள். உண்மை என்னவென்றால் உண்பதற்கு முன் மாம்பழத்தை தண்ணீரில் சிறிது நேரம் போட்ட பிறகு சாப்பிடலாம். ஏதேனும் பிரச்சினை இருந்தால் மாம்பழம் சாப்பிட்ட பிறகு பால் குடிக்கலாம், சரியாகிவிடும்

குளிர்ந்த தண்ணீர் அல்லது ஐஸ்கிரீம், சளியை ஏற்படுத்தும் என்பது உண்மையல்ல. உண்மை என்னவென்றால் சளிக்குக் காரணம் வைரஸ் கிருமிகள். குளிர்ந்த நீர் சுத்தமாக இருக்கும்பட்சத்தில் அருந்தலாம். தொண்டையில் அலர்ஜி இருந்தால் தவிர்க்கவேண்டும்.

கோடை காலத்தில் குறைந்தபட்சம் 2 அல்லது 3 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். தண்ணீர் அருந்துவது அவரவர் இருக்கும் சூழலைப் பொறுத்தது. வெயிலிலும் சூரிய வெப்பத்திலும் அலைபவர்கள் உடலின் தேவையை கருத்தில் கொண்டு தேவையான தண்ணீரைக் குடிக்கலாம். வெப்பம் குறைந்த அல்லது குளிர்சாதன அறையில் இருப்பவர்களுக்கு மேற்கண்ட தண்ணீர் அளவு தேவைப்படாது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கொளுத்தும் வெயில் விஜய்யின் படப்பிடிப்பையும் பாதிக்கிறதாம்..!!
Next post இனிமேல் ரெஸ்ட்லிங் போட்டியில் கொடிகட்டிப் பறந்த அண்டர்டேக்கர் இல்லை!! ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ள சம்பவம்..!! (வீடியோ)