பெண்ணை மிரட்டி உல்லாசம்: வசமாக மாட்டிக் கொண்ட போலி சாமியார்..!!

Read Time:2 Minute, 22 Second

625.0.560.350.160.300.053.800.668.160.90 (2)தமிழ்நாட்டில் இளம்பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட சாமியாரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கூடுவாஞ்சேரியில் ஆதி சிவ பிரம்ம சிவனடியார்கள் என்ற பெயரில் ஆசிரமம் நடத்தி வருபவர் அண்ணாமலை (48).

இவரிடம் அதே பகுதியை சேர்ந்த திருமணமான 24 வயது பெண் உடல் நல பிரச்சனை காரணமாக குறி கேட்க வந்துள்ளார்.

அப்போது ஆசிரமத்தில் இருந்த சாமியார் அண்ணாமலை விபூதி தருவதாக கூறி பெண்ணிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்துள்ளார்.

மேலும், இங்கு நடந்ததை யாரிடமாவது கூறினால் உன்னுடைய குழந்தைக்கு கை, கால் செயல்படாமல் மந்திரம் மூலம் கட்டி விடுவேன், கணவரை கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார்.

இதையடுத்து தனக்கு நேர்ந்த கொடுமையை வெளியில் சொல்லாத பெண் மன அழுத்ததில் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

அவரை காப்பாற்றிய கணவர் இது குறித்து மனைவியிடம் விசாரிக்க சாமியாரை பற்றி அவர் கணவரிடம் கூறியுள்ளார்.

பின்னர் இதை அக்கம்பக்கத்தினரிடம் கணவர் கூற ஆத்திரமடைந்த அந்த பகுதி மக்கள் நேற்று முன்தினம் இரவு சாமியார் தங்கியிருந்த இடத்திற்கு சென்று சாமியாரை சரமாரியாக அடித்து உதைத்து கூடுவாஞ்சேரி பொலிசில் ஒப்படைத்தனர்.

பின்னர் சாமியார் அண்ணாமலையை கைது செய்த பொலிசார் அவரிடம் விசாரித்தனர்.

விசாரணையில், அவர் முன்னர் சைக்கிள் மெக்கானிக்காக இருந்ததும், பின்னர் போலி சாமியாராக வலம் வருவதும் தெரியவந்தது.

இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்ட அவரை பொலிசார் சிறையில் அடைத்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இந்தி நடிகை ராக்கி சாவந்துக்கு கைது வாரண்டு..!!
Next post சூர்யாவுக்கு வில்லனாக நடிக்கத் தயாராகும் கார்த்தி..!!