புதிய போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுத் தலைவர் உத்தியோகபூர்வமாக கடமையேற்கிறார்!

Read Time:2 Minute, 4 Second

SLMM.solberg.jpgஇலங்கைப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் புதிய தலைவர் மேஜர் ஜெனரல் லார்ஸ் ஜொஹான் சோல்பேக் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த வாரம் கிளிநொச்சி சென்று எல்.ரீ.ரீ.ஈ.யினரைச் சந்தித்த புதிய கண்காணிப்புக் குழுத் தலைவர், பின்னர் தனது நாட்டுக்குத் திரும்பியிருந்தார்.

குழுவில் புதிய உறுப்பினர்களாக இணைந்து கொள்ளும் நோர்வே மற்றும் ஐஸ்லாந்து நாட்டுப் பிரஜைகள் இவ்வாரம் இலங்கை வரவுள்ளதாக கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர் டொபினர் ஒமர்சன் கூறியுள்ளார்.

இதேவேளை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளைச் சேர்ந்த கண்காணிப்பாளர்கள் தமது கடமைகளை நேற்றுடன் நிறைவு செய்து கொள்கின்றனர். கண்காணிப்புக்குழுவில் அங்கம் வகித்த 57 பேரில் 37 பேர் ஐரோப்பிய நாடுகளின் உறுப்பினர்களாவர்.

எல்.ரீ.ரீ.ஈ. அமைப்பை ஐரோப்பிய ஒன்றியம் தடை செய்ததைத் தொடர்ந்து அந்த நாடுகளைச் சேர்ந்த உறுப்பினர்களை கண்காணிப்புக் குழுவிலிருந்து விலகுமாறு புலிகள் வற்புறுத்தியிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து சுவீடன், பின்லாந்து, டென்மாரக் ஆகிய ஐரோப்பிய நாடுகளின் பிரஜைகள் தமது கண்காணிப்பினை நிறுத்;தியுள்ளதோடு பின்லாந்தைச் சேர்ந்த 10 கண்காணிப்பாளர்கள் நேற்று நாடு திரும்பியிருந்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post 15 பெண்கள் கற்பழிப்பு: சீன இளைஞருக்கு மரணதண்டனை நிறைவேற்றம்
Next post அமெரிக்க ஓபன் டென்னிஸ்: 2-வது சுற்றில் ஹிங்கிஸ் அதிர்ச்சி தோல்வி