சூரிய கதிர்களால அலர்ஜி உண்டாயிருக்கா இதோ 10 சூப்பரான குறிப்புகள்..!!
கரும்படலம் பொதுவாக பெண்களுக்கு வரக் கூடிய ஒரு சருமப் பிரச்சனை. மேலும், இது சருமத்தில் நிற மாற்றத்தை ஏற்படுத்தி ஒரு சில கரும்படலத்தை சருமத்தில் ஏற்படுத்தும். திடீரென்று இது சருமத்தின் மேல் பகுதியில் வருவதால் நமக்கே ஒரு வித வெறுப்பு ஏற்படும். இதனை உடனே சரி செய்ய முயற்சிக்க வேண்டும். இல்லையென்றால், இது பரவுவதற்குக் கூட வாய்ப்பு உள்ளது. மெலாஸ்மாவிற்கு என்று இப்போது நிறைய கிரீம்கள் இருக்கின்றன.
ஆனால், அவை அனைத்தும் விலை உயர்ந்ததாக இருக்கும் அல்லது சில மருந்துக்கள் நம்புவதா இல்லையா என்ற சந்தேகம் அதிகமாகவே இருக்கும். மற்ற மருந்துகளை உபயோகிக்க விருப்பமில்லாமல் எந்த சிகிச்சையும் மேற்கொள்ளாமல் இருப்பவர்களுக்கு இந்த இயற்கை வழி சிகிச்சை நிச்சயம் உதவும். மேலும் இந்த சிகிச்சை செய்ய அவ்வளவு செலவு ஒன்றும் ஆகப்போவதும் இல்லை. வீட்டில் உள்ள பொருட்களே நல்ல மருந்தாக செயல்படுகின்றன. இப்போது நாம் சரும நிறமாற்றத்தால் ஏற்படும் கரும்படலத்தை போக்குவதற்கான 10 எளிய வீட்டு வைத்திய முறைகளைப் பார்ப்போம் வாருங்கள்…
எலுமிச்சைச் சாறு எலுமிச்சையில் உள்ள அமிலத் தன்மை நம் உடலில் ஏற்படும் பல்வேறு உட்புற மற்றும் வெளிபுறப் பிரச்சனைகளுக்கு நல்ல மருந்தாகும். அதனால் தான் அனைத்து வீட்டு வைத்திய முறைகளிலும் எலுமிச்சை முக்கிய பங்கு வகிக்கின்றது. இதனை நம் சருமத்தின் நிற மாற்ற பிரச்சனைக்கு உபயோகிப்பதால், சருமப் பிரச்சனையை தீர்ப்பதுடன் மேலும் அது பரவாமலும் தடுக்கலாம்.
மஞ்சள் தூள் மஞ்சள் தூளை தண்ணீர் சேர்த்து ஒரு கிரீம் போல சருமத்தில் போட வேண்டும். அது நிற மாற்றத்தை நீக்கி அது மறுபடியும் வராமல் தடுக்கிறது. மேலும் பெண்களுக்கு வரக் கூடிய பிற சருமப் பிரச்சனைகளுக்கும் நல்ல மருந்தாக செயல்படுகிறது.
பப்பாளி பழுத்தப் பப்பாளி பழமானது இந்த சரும நிற மாற்ற பிரச்சனைக்கு நல்ல மருந்தாகும். இது நிறம் மாறிய தோலை நீக்கி நம் சருமத்தில் கரும்படலம் ஏற்படாமல் தடுக்கிறது.
ஆப்பிள் சிடர் வினிகர் ஆப்பிள் சிடர் வினிகரில் அல்கலைன் அதிக அளவில் உள்ளதால் இது சரும நிற மாற்ற பிரச்சனையை சரி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆப்பிள் சிடர் வினிகர் மற்றும் தண்ணீரை சம அளவில் எடுத்து கலந்து சருமப் பிரச்சனை உள்ள இடங்களில் தடவ வேண்டும். வாரத்திற்கு 2 முறை இதை ட்ரை செய்தால் நிச்சயம் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதை கண்கூடாகப் பார்க்கலாம்.
கற்றாழை ஜெல் ஒரு டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லை தினமும் அந்தக் கரும்படலத்தின் மேல் போட வேண்டும். இதனால், கரும்படலத்தின் நிறம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைவதை நீங்களே பார்க்கலாம்.
வெங்காயச் சாறு மெலாஸ்மா என்னும் இந்த சரும நிற மாற்றப் பிரச்சனையால் அவதிப்படும் பெண்களுக்கு வெங்காயச் சாறு மிகவும் உதவியாக உள்ளது. வெங்காயத்தை அரைத்துச் சாறு எடுத்து நிற மாற்றம் ஏற்பட்ட இடங்களில் தடவி வாருங்கள். சருமம் அதன் உண்மையான நிறத்தை கண்டிப்பாகப் பெறும்.
ஆப்ரிகாட் கெர்னல் ஆயில் ஆப்ரிகாட் கெர்னல் ஆயிலில் வைட்டமின் சத்துக்கள் அதிகமாக இருப்பதால் மெலாஸ்மாவிற்கு நல்ல மருந்தாக செயல்படுகிறது. சிறிதளவு பஞ்சில் அந்த எண்ணெயைத் தொட்டு கரும்படலத்தின் மேல் சிறிது நேரம் வைக்க வேண்டும். பின்னர், குளிர்ந்த நீரினால் எண்ணெய் பசையைக் கழுவி விடுங்கள்.
ஓட்ஸ் சருமக் கருமையைப் போக்க ஓட்ஸை சருமத்தின் மேல் போட வேண்டும். இது இறந்த சரும செல்களை அழித்து சருமத்தை பாதுகாக்கிறது. இதை சருமத்தில் போடவதால் கருத்த சருமம் உரிந்து உண்மையான சரும நிறம் வந்துவிடும்.
திராட்சை விதைச் சாறு திராட்சை விதைச் சாற்றில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சருமத்தின் கரும்படலத்தை போக்கி சருமத்தைப் பாதுகாக்கிறது. இதை தினமும் சருமத்தில் போடுவதால் சீக்கிரமே நல்ல பலன் கிடைக்கும்.
சந்தனப் பவுடர் சந்தனப் பவுடரை தண்ணீரில் கலந்து சருமத்தின் மீது போட வேண்டும். இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மெலாஸ்மா என்னும் சரும பிரச்சனையில் இருந்து விடுபட உதவுகிறது. நாள் ஒன்றுக்கு இரண்டு முறை இதை செய்யவேண்டும்.
Average Rating