ஆழமான புதைகுழியில் சிக்கிய 11 யானைகள்: 2 நாட்களுக்கு பின் மீண்டது எப்படி?,,!! (வீடியோ)

Read Time:1 Minute, 26 Second

625.117.560.350.160.300.053.800.210.160.90 (1)கம்போடியாவில் உள்ள புதைகுழி ஒன்றில் இரண்டு நாட்களாக சிக்கியிருந்த 11 யானைகளை வனத்துறையினர் மீட்டுள்ளனர்.

கம்போடியாவில் புகழ்பெற்ற வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ளது.

வியட்நாம் போரின் போது சரணாலயத்தை சுற்றி குண்டுகள் வீசப்பட்டதால் சரணாலயம் பகுதிகளில் பல இடங்களில் பள்ளம் ஏற்பட்டது.

அந்த பள்ளங்கள் பின்னர் புதைகுழியாக மாறின. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் 11 யானைகள் ஒன்றாக தண்ணீர் குடிக்க புதைகுழியில் இறங்கின.

அப்போது சகதியில் யானைகள் சிக்கி கொண்டன, ஒருநாள் கழித்தே இதை அந்த ஊர் மக்கள் பார்த்துள்ளனர்.

பின்னர் அவர்கள் வனத்துறைக்கு தகவல் தர அவர்கள் அங்கு வர மேலும் ஒருநாள் ஆகிவிட்டது.

பின்னர் வனத்துறை அதிகாரிகள் 11 அடி ஆழமுள்ள புதைகுழியில் ஒரு முனையை தோண்டி சாய்வு தளத்தை ஏற்படுத்தினர்.

பின்னர் சகதியில் தண்ணீர் பாய்ச்சினர். இதையடுத்து 11 யானைகளும் பத்திரமாக வெளியில் வந்தது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இளவரசி டயானா மனநலம் பாதிக்கப்பட்டவரா? வெளியான பகீர் தகவல்..!!
Next post ஜி.வி.பிரகாஷ் ஜோடியாகும் பூனம் பாஜ்வா..!!