வெயில் காலத்தில் சருமத்தை பாதுகாக்கும் வழிமுறைகள்..!!

Read Time:3 Minute, 46 Second

201703311348135094_What-can-be-applied-to-skin-in-summer_SECVPFஎண்ணெய் வடியும் சருமம் உள்ளவர்களுக்கு

எண்ணெய் அதிகம் உள்ள உணவு வகைகளை தவிர்ப்பது நல்லது. தினமும் மேக்கப் செய்பவர்கள் ஐஸ்கட்டியை பயன்படுத்துவது சிறந்ததாகும். வறண்ட சருமம் உள்ளவர்கள் பயன்படுத்தக்கூடிய ஃபேஸ் வாஷ் நீம் ஃபேஸ் வாஷாக இருப்பது நல்லது. முகப்பரு இருக்கக்கூடியவர்கள் ஃபேஸ் மசாஜ் செய்யவே கூடாது. கிரீம் பேஸ்டு அழகு சாதனப் பொருட்கள் பயன்படுத்தக்கூடாது. ஜெல் பேஸ்டு பயன்படுத்தலாம்.

ஃபேஸ் பேக் செய்வது எப்படி?

சுத்தமான ஆலுவேரா(கற்றாழை), 2 டேபிள் ஸ்பூன் சுத்தமான தயிர். அரைக்கப்பட்ட ஸ்டாபெரி விழுது 3 ஸ்பூன் அனைத்தையும் கலந்து முகத்தில் மசாஜ் செய்ய வேண்டும். பின்னர் மிருதுவான வெந்நீரில் கழுவ வேண்டும். எண்ணெய் வடியும் சருமம் இருப்பவர்கள் எப்போதுமே இளமையாக இருப்பார்கள். இது அவர்களின் தனித்துவமாக இருக்கிறது.

வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு

தினமும் மாய்ஸ்டிரைசர் பயன்படுத்த வேண்டும், தூங்கப் போகும்போது நைட் கிரீம் பயன்படுத்த வேண்டும். ஃபேஸ் ஜெல் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். கிரீம் பேஸ்டு ஃபவுண்டேஷன் பயன்படுத்துவது நல்லது. வைட்டமின் ஏ, பி, சி ஊட்டச்சத்து உள்ள உணவுகள் எடுத்துக்கொள்ள வேண்டும்.

முகச்சுருக்கங்களை ஏ மற்றும் பி வைட்டமின்கள் கட்டுப்படுத்தும். வைட்டமின் சி வெயிலால் சருமம் பாதிக்கப்படாமல் பாதுகாக்கும். வைட்டமின் சி வருண்ட சருமத்திற்கு சிறந்தது. கருவளையங்களைப் போக்குவதற்கு வைட்டமின் கே சிறந்தது. அவகடோ மாய்ஸ்டிரைசர்ஸ் வறண்ட சருமத்திற்கு சிறந்தது. அவற்றை கண் மற்றும் மூக்கு பகுதியில் பயன்படுத்தக்கூடாது. 15 நிமிடம் வைத்து சாதாரண தண்ணீரில் கழுவ வேண்டும்.

வெள்ளரிக்காயை எல்லாவித சருமத்திற்கும் பயன்படுத்தலாம். வெள்ளரிக்காயை நன்றாக அரைத்து முகத்தில் தடவி 15லிருந்து 20 நிமிடம் காய வைத்து கழுவ வேண்டும். அரை கப் ஆர்கானிக் ஆப்பிள் ஜூஸை காட்டன் துணியால் நனைத்து முகத்தில் தடவி விடவேண்டும். இது எல்லாவித சருமத்திற்கும் பயன்படுத்தலாம்.

கருவளையங்களை போக்குவதற்கு

4 டேபிள்ஸ்பூன் லெமன் ஜூஸ் மற்றும் ஐஸ் வாட்டர் கலந்து காட்டன் துணியால் நனைத்து கண்களை மூடி புருவத்தின் மேல் பகுதியிலும் கண்களை சுற்றிலும் வைக்க வேண்டும். பிறகு சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். அரை கப் பால், ஒரு தேக்கரண்டி தேன், அரை கப் ஓட்ஸ் எடுத்து நன்றாக கலக்கி முகத்தில் சாதாரணமாக மசாஜ் செய்ய வேண்டும். இது வெயில் காலங்களில் எல்லா வித சருமத்திற்கும் சிறந்தது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண்கள் சுய இன்பம் தேவையா?..!!
Next post ‘அதி மேதாவிகள்’ திரைப்படம்: அரியர்ஸ் மாணவர்களுக்கு சமர்ப்பணம்..!!