குழந்தை பெறும் திட்டம் தற்போதைக்கு இல்லை: பிபாஷா பாசு..!!

Read Time:1 Minute, 48 Second

201703291233350473_Not-planning-to-have-a-baby-right-now-Bipasha-Basu_SECVPFராஸ், தூம் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த நடிகை பிபாஷா பாசு. இந்திப்பட உலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்த இவர், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தனது 38-வது வயதில் கரண்சிங் குரோவரை திருமணம் செய்துகொண்டார்.

இந்த நிலையில் பிபாஷா பாசு கர்ப்பமாக இருப்பதாகவும், அவருக்கு குழந்தை பிறக்கப் போவதாகவும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ஆனால், இதை நடிகை பிபாஷா பாசு மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:-

என்னை பற்றி பரப்பப்படும் எந்த தகவலையும் நம்பவேண்டாம். நான் கர்ப்பமாக இருக்கிறேன் என சிலர் சிறுபிள்ளைதனமாக கூறுவது எரிச்சலூட்டுகிறது. என்னிடமிருந்து இதுபோன்ற இனிப்பான செய்திகளை எதிர்பார்த்து காத்திருக்கும் என் நலம் விரும்பிகளிடம் இந்த தவறான செய்திக்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

நான் கர்ப்பிணியாக இல்லை. தற்போது குழந்தை பெற்றுக்கொள்வது குறித்து இதுவரை நாங்கள் எந்த முடிவும் எடுக்கவில்லை. நடக்கும்போது அந்த மகிழ்ச்சியான செய்தியை நிச்சயமாக என் நலம் விரும்பிகளுக்கு தெரியப்படுத்துவேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சவுதியில் பாலியல் அடிமையாக தவிக்கும் இந்திய பெண்: நெஞ்சை பிசையும் சம்பவம்..!!
Next post விமான ஓடுபாதையில் செல்பி எடுத்த இளம் பெண்கள் : நடந்த விபரீதம்..!!